new BB1

மசாலா பப்பட்

Loading...

18db7e58-dcb5-4d31-959b-fa7ee1ac1013_S_secvpf

தேவையான பொருட்கள்:

பப்படம் – 6 ( பச்சை மிளகாய் papads பயன்படுத்தப்படுகிறது)
வெங்காயம் – 1
தக்காளி – 1
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள் – தேவையான அளவு
சாட் மசாலா – தேவையான அளவு
மிளகு தூள் – தேவையான அளவு
ஓமப்பொடி – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• பப்பட்டில் இரு பக்கங்களிலும் சிறிது எண்ணெய் தெளித்து மைக்ரோ வேவில் வைத்து 50 முதல் 55 வினாடிகளில் பிரவுன் கலர் வந்தவுடன் எடுத்து விடவும்.

• பப்பட்டை தட்டில் வைத்து அதன் மேல் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் மிளகாய் தூள், மிளகு தூள், சாட் மசாலா, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

• சுவையான மசாலா பப்பட் ரெடி.

• இதை செய்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் நன்றாக இருக்காது. தேவையான பொருட்கள் அனைத்தையும் ரெடியாக வைத்த பின்னரே இதை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

Loading...
728
2