new BB1

முட்டை மூளை பொரியல்

Loading...

முட்டை மூளை பொரியல்

தேவையான பொருள்கள்

ஆட்டு மூளை – – 2
முட்டை – 3
வெங்காயம் – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மிள‌காய் தூள் – 1 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் – அரை ஸ்பூன்
உப்பு ,ப‌ட்டை – தேவையான அளவு
க‌ர‌ம் ம‌சாலா தூள் – 1 ஸ்பூன்
எண்ணை – தேவையான அளவு
கொத்து ம‌ல்லி த‌ழை – சிறிதளவு

செய்முறை

மூளையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்
முட்டையை ந‌ன்கு நுரை பொங்க‌ அடித்து வைக்க‌வும்.
மூளையில் சிறிது மிள‌காய் தூள் உப்பு ,இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ப‌த்து நிமிட‌ம் ஊற‌வைக்க‌வும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய‌வைத்து ப‌ட்டைபோட்டு தாளித்து நறுக்கிய வெங்காய‌த்தை போட்டு வதக்கவும்.
வெங்காய‌ம் வெந்த‌தும் மீதி உள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ந‌ன்கு வ‌த‌க்கி , மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூளும் சேர்த்து கிள‌றி சிறிது நேர‌ம் மூடி போட்டு வேக‌ விட‌வும்.
இப்போது மூளையை போட்டு லேசாக‌ பிர‌ட்டி முடி போட்டு ஒரு ப‌க்க‌ம் வேக‌ விட‌வும்,இதே போல் ம‌றுப‌க்க‌ம் தோசை பிர‌ட்டுவ‌து போல் பிர‌ட்டி வேக‌விட‌வும்.
க‌டைசியாக‌ முட்டையை ஊற்றி மீதி உள்ள் எண்ணையையும் சேர்த்து மூடி போட்டு வேக‌விட்டு, ம‌றுபக்கமும் வேக‌ விட்டு துண்டுக‌ளாக‌ வெட்டி விட‌வும். வெட்டி விட்டு ந‌ன்கு கிள‌றி , கொத்துமல்லி த‌ழை தூவி மீண்டும் ஒரு முறை பிர‌ட்டிவிட்டு இற‌க்க‌வும்.

Loading...
728
2