new BB1

முதல் ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்

Loading...

முதல் ஆறு மாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்

முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு வீட்டில் தயாராகும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்த உணவை பழக்கலாம்.காலை 8 – 9 மணிக்குள் காலை உணவை கொடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு பால் தரலாம். மொத்தத்தில் பசியுடன் இருந்தால்தான் உணவு உணபதில் குழந்தை ஆர்வம் காட்டும்.

மசித்த இட்லி, இடியாப்பம், மூடி வைக்கப்பட்ட ஆப்பம், மிருதுவான ஊத்தப்பம் போன்றவற்றை கைகளால் மசித்து சிறு சிறு கவளமாக தர வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் பயன்படுத்தி மசிக்கலாம். சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இனிப்பு சுவைதான் குழந்தைக்கு முதலில் புரியும்.

அதை ருசி பார்த்துவிட்டால் பிறகு காரம், உப்பு வகைகளை விரும்பாது. பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். காலை 11 – 12 மணியளவில் புதிதாக வீட்டில் ஆப்பிள், திராட்சை, மாதுளை ஆகியவற்றிலிருந்து தயாரான பழச்சாறை கொடுக்கலாம். திட உணவு பழகும்போது படிப்படியாக நிதானமாக செயல்பட வேண்டும்.

முதலில் 2 – 3 வாரங்களுக்கு காலை உணவு, பிறகு 2 – 3 வாரங்களுக்கு மதிய உணவு, பின்னர் 2 – 3 வாரங்களுக்கு மாலை உணவு… கடைசியாக இரவு உணவு. ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்த உணவையே குழந்தைக்கு தர வேண்டும். ஆறிய உணவுகளை சுட வைத்து கொடுக்கக் கூடாது. மதிய உணவில் சாதத்தை கையால் மசித்து சிறிது உப்பு, ஆறிய வெந்நீர் சேர்த்து ஊட்டலாம்.

பிறகு துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சாம்பார், ரசம், கீரைச் சாறு என மாற்றி மாற்றி ஊட்டலாம். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பரங்கி, பூசணி போன்றவற்றை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து கொடுக்கலாம். புளிக்காத தயிரும், மோரும் குழந்தைக்கு நல்ல பயனளிக்கும். கடையில் விற்கும் இணை உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள்.

அதே போல் பிஸ்கெட், ரொட்டி, கேக், சாக்லெட், நூடுல்ஸ், வறுவல்கள் (சிப்ஸ்) மாதிரியான ஜங்க் ஃபுட்டுக்கும் பழக்கப் படுத்தாதீர்கள். காரணம், அதிலுள்ள காரம் மற்றும் வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். உடல் எடை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

Loading...
728
2