new BB1

மைக்ரோவேவ் மசாலா அவல்

Loading...

மைக்ரோவேவ் மசாலா அவல்

தேவையானவை

அவல் – 2 கப்
பொட்டு கடலை – 1/4 கப் வறுத்தது
மிளகாய்தூள் – கால்தே.க
கறிவேப்பிலை – தேவையான அளவு
சர்கரை – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப்ப
பெருங்காயம் – 1/4 தே.க
எண்ணெய் – 2 தே.க

செய்முறை

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் அவல், உப்பு, சர்க்கரை போட்டு மிக்ஸ் செய்து தனியாக வைத்து கொள்ளவும். வேற ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நல்ல சூடான பிறகு அதில் பெருங்காயம், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் காரத்தூள் போட்டு அதை மைக்ரோவேவில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.

அதை அவல் உள்ள பாத்திரத்தில் கொட்டி நன்றாக கலந்து மைக்ரோவேவில் 5 நிமிடம் வைக்கவும்.
இடையிடையே வெளியில் எடுத்து அதை ஒரு தடவை கலந்து திரும்ப மைக்ரோவேவில் 2 நிமிடம் வைக்கவும். கடைசியில் ரோஸ்டட் பொட்டுகடலையை
கலந்து திரும்ப ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.
* இப்போது மசாலா அவல் ரெடி

Loading...
728
2