new BB1

ராஜ்மா ரைஸ்

Loading...

e05fc629-bb90-45ad-bdda-082449bfdfed_S_secvpf

தேவையான பொருட்கள் :

பொன்னி அரிசி அல்லது பாஸ்மதி அரிசி – 1 கப்,
தேங்காய்ப் பால் – 2 கப்,
ராஜ்மா – 1 கப்,
குடமிளகாய் – அரை கப்,
தக்காளி – 2,
வெங்காயம் – 2
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப,
கொத்தமல்லி – அலங்கரிக்க.

செய்முறை :

• அரிசியை உதிரியாக வேக வைத்து கொள்ளவும்.

• குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• ராஜ்மாவை முதல் நாள் இரவு அல்லது 10 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த தண்ணீரையே விட்டு, பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.

• அரிசியை ராஜ்மா வெந்த தண்ணீர், தேங்காய்ப் பாலுடன், உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.

• கடாயில் சிறிது எண்ணெய் சூடாக்கி, சீரகத்தை போட்டு தாளித்து பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

• அடுத்து தக்காளியுடன் குடமிளகாய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

• தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்கிய பின், வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் வதக்கவும்.

• வேக வைத்த சாதத்தை இத்துடன் சேர்த்துக் கலந்து, 2 நிமிடங்கள் கிளறவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

Loading...
728
2