new BB1

வாட்ஸ் ஆப்-ஐ லாக் செய்து பாதுகாப்பாக பயன்படுத்த உதவும் சில ஆப்கள்

Loading...

வாட்ஸ் ஆப் என்பது நம் அன்றாட வாழ்வில் மிக அத்தியாவசமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் அதில் சாட் செய்வது, அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் பிற தகவல்களை பிறர் அறியா வண்ணம் பாதுகாக்க வேண்டியதும் அத்தியாவசமான ஒன்று. நண்பர்கள் மொபைல் பயன்படுத்தி விட்டு தருகிறேன் என்று கேட்கும் போது தவிர்க்க இயலாது கொடுக்க வேண்டி வரும். அது போன்ற சந்தர்ப்பங்களில் வாட்ஸ் ஆப்-பை பாஸ்வேர்ட் கொடுத்து பிறர் பார்க்கா வண்ணம் லாக் செய்யலாம்.

வாட்ஸ் ஆப்-ஐ லாக் செய்து பாதுகாப்பாக பயன்படுத்த உதவும் சில ஆப்கள்

நமது வாட்ஸ் ஆப் தகவலை பாதுகாக்க உதவும் சில ஆப்-களை பற்றிய விவரம் பின்வருமாறு:

1. மெசெஞ்சர் மற்றும் சாட் பிளாக் ( Messenger and Chat Block)
இந்த ஆப் டவுன்லோட் செய்தவுடன், 4 இலக்க பின் நம்பர் செட் செய்ய வேண்டும். மீண்டும் ஒரு முறை அந்த பின் நம்பர் உறுதி படுத்தியதும், நம் மொபைலில் இருக்கும் அனைத்து ஆப்களையும் காண்பிக்கும்.
அதில் வாட்ஸ் ஆப் மட்டுமின்றி பேஸ்புக், ட்விட்டர், ஜிமெயில்போன்ற பிற மெசெஞ்சர் ஆப்களை லாக் செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம், நாம் அறியா வண்ணம் பிறர் நமது ஆப்களை பயன்படுத்துவதை தவிர்க்க இயலும்.
வாட்ஸ் ஆப்பை லாக் செய்த பிறகு, மீண்டும் அதை பயன்படுத்த வேண்டுமானால் பின் நம்பரை பதிவு செய்து அன்லாக் செய்து கொள்ள வேண்டும். ப்ரீ ஆப்-ஆன இதில் பிற விளம்பரங்கள் ஒளிபரப்பாகும்.
இதற்கான லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.whatsapplock&hl=en

2. ஆப் லாக் (App lock )
முந்தைய ஆப்பை போலவே செயல்படும் இதில் பிற விளம்பரங்கள் வருவதில்லை. கூடுதல் பயனாக குறிப்பிட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை இதிலிருக்கும் வால்ட்(வால்ட்) எனும் இடத்தில் ஸ்டோர் செய்து கொள்ளலாம். வால்ட்டில் ஸ்டோர் செய்தவை கேலரியில் இருக்காது.
மேலும் பின் நம்பரை மறந்து விட்டால் மின்னஞ்சல் மூலம் திரும்ப பெறுவதற்கு, நமது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
இதற்கான லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.domobile.applock&hl=en

3. ஸ்மார்ட் ஹைட் கால்குலேட்டர் (Smart Hide Calculator )
இந்த ஆப் சற்று வித்தியாசமானது. பிறரது பார்வைக்கு இது வெறும் கால்குலேட்டராக தெரியும் வகையில், இதை டவுன்லோட் செய்த பின்னர் கால்குலேட்டர் என்ற பெயரில்,பார்ப்பதற்கும் கால்குலேட்டர் போன்று கணக்கு குறியீடுகளுடன் மொபைலில் சேவ் ஆகிறது.
இதில் ஆப்களை மறைத்து(hide ) வைத்து கொண்டு மீண்டும் வெளிப்படையாக காண்பிக்க(unhide) பின் நம்பர் செட் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் மறைக்க படும் ஆப்களை திரும்ப பெற முடியவில்லை என்ற குறை பயனர்களிடமிருந்து கிளம்பியதை தொடர்ந்து அதை சரி செய்து கொண்டிருகிறார்கள். இதை தகவலுக்காக தந்துள்ளோம். முதல் 2 ஆப்-களை பயன்படுத்திப் பாருங்கள்.
இதற்கான லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.ids.smartcalculator&hl=en

Loading...
728
2