new BB1

வாழைக்காய் மிளகு கூட்டு

Loading...

தேவையான பொருள்கள்:

நறுக்கிய வாழைக்காய் – 2 கப்
புளி – 50 கிராம்
தேங்காய் துருவல் – அரை கப்
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 4
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.

வாழைக்காய் மிளகு கூட்டு

செய்முறை:

ஒன்றரை கப் தண்ணீரில் புளியை ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். புளிக் கரைசலில் வாழைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
கடாயில் ஒரு டீஸ்பூன் தேங்-காய் எண்ணெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்தெடுக்கவும்.
இதை மிக்ஸியில் போட்டு, அரை கப் சின்ன வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, மீதமுள்ள அரை கப் சின்ன வெங்காயத்தை நறுக்கி சேர்த்து வதக்கி, மிக்ஸியில்அரைத்த கலவை, புளித் தண்ணீரில் வேக வைத்த வாழைக்காய், உப்பு போட்டு கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.

Loading...
728
2