new BB1

வெங்காயம் பூண்டு சப்பாத்தி

Loading...

IMG_2797
தேவையான பொருட்கள் :

மைதா மாவு 1 கப்
கோதுமை மாவு 2 கப்
பெரிய வெங்காயம் 1
பூண்டு 8 பல்
பச்சை மிளாய் 4
புளித்த தயிர் கால் கப்
உப்பு – தேவையான அளவு
நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

வெங்காயத்தை தோலுரித்து நான்காக வெட்டிக்கொண்டு சன்னமாகத் துருவவும். பச்சை மிளகாயையும் லேசாக அரியவும்.

மாவுகளில் துருவிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

இதில் புளித்த தயிரை சேர்த்து நன்கு பிசைந்து 1 மணி நேரம் ஊற விடவும்.

மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.

உருண்டையின் மீது மாவு தடவி சற்று கனமான சப்பாத்திகளாக உருட்டவும்.

நன்கு சூடான தோசைக் கல்லில் போட்டு இருபுறமும் நன்கு வேக வைக்கவும்.

சிவந்த நிறத்திட்டுகள் தோன்றியவுடன் சிறிது நெய் விட்டு நன்கு மொரமொரப்பாக ஆகும் வரை சுடவும்.

தயிர்ப் பச்சடி, காய்கறி சப்ஜி சேர்ர்த்து உண்ணலாம்.

ஆறிய பிறகும் இது மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

Loading...
728
2