new BB1

வெண்புள்ளி நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு

Loading...

வெண்புள்ளி நோய்க்கு மருந்து கண்டுபிடிப்புஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளி நோய்க்கு அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலை மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள். தோலுக்கு நிறத்தை தருவது மெலனின் நிறமியாகும். இதை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுகளின் எண்ணிக்கை குறைவதால் இந்தநோய் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

1.நோய் எதிர்ப்பு சக்தி குறைவது
2. வெயிலில் அதிக நேரம் இருப்பது
3. நெடியுள்ள ரசாயனங்களை கையாளுவது

போன்ற காரணங்களால் வெண்புள்ளி (வெண் குஷ்டம்) ஏற்படலாம் என்று சொல்கிறார்கள்.

வெண்புள்ளி நோய் தீர:


லைட் தெரபி,

கிரீம்கள்,

அறுவை சிகிச்சை

என பல சிகிச்சை முறைகள் இருந்தாலும் திருப்திகரமான முன்னேற்றம் கிடைப்பதில்லை.
சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் நல்ல மருந்துகள்
இருந்தாலும், மருந்துகளை உபயோகித்து நல்ல பலன் காண நீண்டநாட்கள் ஆகும். பத்தியமும் தேவைப்படும். மருந்துகள் உட்கொள்ளும் பொழுது இந்நோயின் பரம எதிரியான வெள்ளை சர்க்கரை, புளி, புளிப்புள்ள உணவுகள், பழங்கள் போன்றவற்றை கண்ணாலும் பார்க்ககூடாது.

மூட்டு வலி சிகிச்சைக்குப் பயன்படும் டோபாசிடினிப் ( Tofacitinib அல்லது Ruxolitinib )எனும் வெளிப்பூச்சு மருந்து, வெண்குஷ்டத்திற்கு நல்ல பலன் கொடுப்பதைக் சமீபத்தில் அமெரிக்காவின் யேல் பல்கலையைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

53 வயது நிரம்பிய நபர் ஒருவருக்குவெண்புள்ளியால் பாதிக்கப்பட்டு இருந்தது. அவவருக்கு வழக்கமான சிகிச்சை முறைகளால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.இந்த சூழ்நிலையில் அந்த நோயாளிக்கு டோபாசிடினிப் மருந்தை வெளிப்பூச்சு மருந்தாக இரண்டு மாதங்களுக்கு கொடுக்கப்பட்டதில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. எந்த விதமான பக்கவிளைவுகளையும ஏற்ப்படுத்தவில்லை.

நோயாளியின் தோள்புறம் மற்றும் கைகளில் காணப்பட்ட வெண்புள்ளிகள் மறையத் ஆரம்பித்ததாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். எனவே இனிமேல் வருங்காலத்தில் வெண்புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்து நல்ல பலனைக் கொடுக்கும் என யேல் பல்கலை விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த மருந்து alopecia areata எனப்படும் திட்டு திட்டாக ஏற்படும் புழுவெட்டுக்கும் நல்ல பலனைத் தருகிறது. வழுக்கைய நீக்கி திரும்பவும் முடி வளரச் செய்கின்றது.

இதை வாசிக்கும் அன்பர்கள் சுயசிகிச்சை செய்ய வேண்டாம். தோல்நிபுணர் மருத்துவரிடம் கலந்தாலோசித்து அவரின் அறிவுரையின்/மேற்பார்வையில் பயன்படுத்தவும்.

Loading...
728
2