பிரித்தானியாவில் பெண் ஒருவர் 6 ஆயிரத்து 550 அடி உயரத்தில் சிரித்தபடியே செல்பி எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மத்தியில் செல்பி மோகம் பிரபலமடைந்து வருகிறது, செல்பி எடுப்பதற்காக விபரீதமான முயற்சியில் ஈடுபடுபவர்கள் சில நேரங்களில் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவின் ஷரோப்ஷைர் கவுண்டியின் ப்ரோசெலியை சேர்ந்த லாரன் நாவல் என்பவர், பாராகிளைடிங் மூலம் துருக்கியில் உள்ள மத்திய தரைக்கடலுக்கு மேலாக 6 ஆயிரத்து 550 அடி உயரத்தில் பறந்துகொண்டு செல்பி எடுத்துள்ளார்.
இந்த செல்பியை நாவலின் பயிற்றுவிப்பாளர் எடுத்துள்ளார், துருக்கி மேற்கு கடற்கரையில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது இந்த ஆசை நாவலுக்கு வந்துள்ளது.
இந்த முயற்சியின்போது, 20 நிமிடம் பறப்பதற்குள் பாராகிளைடர் பலமுறை சுழன்றதாக கூறியுள்ளார், இந்த அனுபவம் தனக்கு மிகவும் சந்தோஷமாகவும், அமைதியாகவும் இருந்தது என்று கூறியுள்ளர்.
எனது அடுத்த இலக்கு தென் ஆப்ரிக்கா சென்று பாராகிளைடிங் மூலம் அதிக உயரம் சென்றவர் என்ற சாதனை படைப்பதுதான் என்று கூறியுள்ளார்.