new BB1

உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் நொறுக்குதீனி

Loading...

வேலை வேலை என்று பறந்து கொண்டிருப்பவர்கள் எதைச் சாப்பிடுகிறோம் எப்படி சாப்பிடுகிறோம் என்பது தெரியாமல்  

38cc51d7-0c68-404c-8c26-0303600bc04b_S_secvpf

பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணெயில் வறுக்கப்பட்ட தானிய வகைகள்,

கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்து நாட்களை கழிக்கிறார்கள்.

பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ்கிரீம் இதெல்லாம்

நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான். இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான்

சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது.

மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு

சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும்.

ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருப்பதற்கு சேர்க்கும் பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும்.

இது புற்றுநோயை வரவழைக்கக் கூடியது.

அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் இரத்தத்திற்குக்

கிடையாது. சிறுநீரகமும் இதை சுத்திகரிக்காது.

வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை

சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது.

அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங்காயத்தையும்

அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண்கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும்.

பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.

நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம்.

இவர்களுக்கு காலையில்

எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும் இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை

சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும்.

பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற

உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர்,

பித்தப்பை கல், பெருங்குடல் புற்றுநோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி,

மஞ்சள் காமாலை அதிகபட்சமாக புற்றுநோய் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.

நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம்.

Loading...

728

2