new BB1

காந்தத்தால் ஈர்க்கப்படாத உலோகம்!

Loading...

காந்தத்தால் ஈர்க்கப்படாத உலோகம்!புளூட்டோனியம், ஓர் உலோகம் என்பதில், விஞ்ஞானிகளுக்கு சந்தேகம் இல்லை. ஆனால், ஒரு காந்தத்தை அருகே வைத்தால், அது ஏன் ஒட்டுவதில்லை என்பது தான், பல ஆண்டுகளாக, புதிராக இருந்து வந்தது.
காந்தத்தால் ஈர்க்கப்படாத புளூட்டோனியத்தை, தீவிரமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள், அந்த உலோகத்தின் எலக்ட்ரான்களின் அமைப்பு தான் காரணம் என்பதை, சமீபத்தில் கண்டறிந்திருக்கின்றனர். இந்த கண்டு பிடிப்பு ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுவாக, ஓர் உலோகத்தின் அணுக் கருவை, பல எலக்ட்ரான்கள் சுற்றி வருகின்றன. சில எலக்ட்ரான்கள் அணுக் கருவுக்கு மிக அருகேயும், சில சற்று தள்ளியும் வளைய வருகின்றன. தாமிரம், இரும்பு போன்ற உலோகங்களின் அணுக் கருக்களின் வெளிப்புறத்தில் சுற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை, பெரும்பாலும் ஒரே எண்ணிக்கையில் தான் இருக்கும்.
ஆனால், புளூட்டோனியத்தின் வெளிப்புற எலக்ட்ரான்களின் எண்ணிக்கை சில சமயம் நான்கு, சில சமயம் ஐந்து, சில சமயம் அதைவிட அதிகமாக இருந்தன. ‘இப்படி அடிக்கடி மாறும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையால் தான், புளூட்டோனியம் காந்தப் புலத்தால் ஈர்க்க முடியவில்லை’ என, ஆய்வை மேற்கொண்ட அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவைச் சேர்ந்த மார்க் ஜனோஷெக் தெரிவித்தார்.

Loading...

728

2