கார்ன் – கால் கப்
முந்திரி – 20
டூட்டி ஃப்ரூட்டி – 2 மேசைக்கரண்டி
சீனி – அரை கப்
பால் – ஒரு கப்
மில்க் மெய்ட் – கால் கப்
கார்ன் பாயாசத்திற்கு தேவையானப் பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரிப்பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் கார்னை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
கார்ன் பொரிந்தவுடன் பால் ஊற்றி மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதில் சீனியை சேர்த்து சீனி கரையும் வரை கிளறி விடவும்.
சீனி கரைந்ததும் டூட்டி ஃப்ரூட்டி, மில்க் மெய்ட், வறுத்த முந்திரி போட்டு கிளறி விடவும்.
பிறகு இரண்டு நிமிடம் கழித்து பாயசத்தை இறக்கி வைத்து விடவும்.
சுவையான கார்ன் பாயசம் ரெடி.