new BB1

கோடையை வெல்லும் கொடைகள்

Loading...

கோடையை வெல்லும் கொடைகள்வெயிலின் வெம்மையில் துவண்டு சாயும் செடி கொடிகள், வெம்மை தாங்களது இலைகளைத் துறந்து நிற்கும் மொட்டை மரங்கள், இன்னும் தள்ளாடி நடை போடும் ஆவி னங்கள், அணு உலையோ, அடுக்களையோ அனல் காற்றை அள்ளியடிக்கிறதோ என ஐயுறச் செய்யும் கோடைக் காற்று, இத்தனை யும் தாண்டி இன்பமாய் கோடையைத் தாண்ட இதோ சில இயற்கையின் நடைமுறைக் கொடைகள்.

வியர்வை நீக்க நன்கு குளிக்க வேண்டும். காய்ச்சி வடிகட்டிய, சாதாரண மாக அறையில் வைக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரையே குடிக்க வேண் டும். குறைந்தது 3 முதல் 4-1.2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். பழங்கள், பச்சைக் காய்கறிகளை வெதுவெதுப் பான நீரில் ஊற வைத்து சுத்தமாக கழுவி பச்சையாக சாப்பிட வேண்டும். வெள்ளைப் பருத்தி துணிகள் உகந்தது. உடற்பயிற்சியும் அவசியம்.

கீரைகள், வாழைத் தண்டு, சுரைக்காய், வெள்ளரிக்காய், விதை நீக்கிய தக்காளி, முட்டைகோஸ், முளைத்த பயிறு வகைகள், முள்ளங்கி, குடைமிளகாய் முதலியன பச்சையாகவோ, மோர் தெளித்தோ சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொறித்த கொழுப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

Loading...

728

2