new BB1

சத்துப்பட்டியல் பாலாடைக் கட்டி!

Loading...

சத்துப்பட்டியல்  பாலாடைக் கட்டி‘சீஸ்’ என அழைக்கப்படும் பாலாடைக் கட்டி நமது உணவுப் பொருட்களின் பட்டியலில் நீங்காத இடம் பிடிப்பவை. உணவுக்கு images (26)மணமும், சுவையும் தரும் சீஸ், உடலுக்கு அத்தியாவசியமான பல சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளன. அதன் சத்துகளை பார்க்கலாம்…

* பாலில் இருந்து தயாரிக்கப்படும் சுவையான உணவுப் பொருளில் சீஸ் எனப்படும் பாலாடைக் கட்டியும் ஒன்று. உலகம் முழுவதும் சீஸ் பயன்படுத்தப்படுகிறது. பசு, எருமை, ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் பாலில் இருந்து சீஸ் தயாரிக்கப்படுகிறது.

* சீஸ், உடலில் உள்ள சத்துப் பொருட்களை சம நிலைப்படுத்த உதவுகிறது. இதில் உடலை செரிவூட்டும் சத்துப்பொருட்களான புரதம், வைட்டமின் மற்றும் கார்போ-ஹைட்ரேட் போன்றவை நிறைந்துள்ளன.

* தாதுப் பொருட்கள் அதிக அளவில் காணப்படுவதால் ரத்த சோகை, உடல் சோர்வு, இருமல் போன்றவற்றுக்கு சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது.

* சீஸில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் பொருட்கள் நிறைந்துள்ளன. 100 கிராம் பாலாடைக் கட்டியில் 28.5 கிராம் அளவிற்கு கால்சியம் உள்ளது. இவை உடலில் உள்ள எலும்புகளை வலிமை பெறச் செய்வதுடன், ‘ஆஸ்டியோபோராசிஸ்’ என்ற எலும்பு அரிப்பு நோய் வராமல் தடுக்கிறது.

* கால்சியம் சத்துக்களை தினசரி உணவில் குறிப்பிட்ட அளவில் சேர்த்துக் கொள்வது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு நன்மை பயக்கும். புற்றுநோய்களுக்கு எதிர்ப்புத் தன்மை வழங்கும். பற்களின் உறுதிக்கும் கால்சியம் அவசியம்.

* ‘வைட்டமின்-பி’ சத்து பாலாடைக் கட்டியில் குறிப்பிட்ட அளவில் காணப்படுகின்றன. இவை உடற்செல்களின் வளர்ச்சியில் பெரிதும் பயன்படுகின்றன. சருமத்தை மென்மையாகவும், பொலிவாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன.

* பாலாடைக் கட்டியில் 50 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு பொருட்கள் இருப்பதால் மெலிந்தவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். கொழுப்பு மிகுதியாக இருப்பதால் இது நன்மை தருமா, தீமை தருமா? என்ற இருவேறு கருத்துகளுக்கு வழி வகுக்கிறது. இருந்தாலும் அளவுடன் சேர்ப்பது எப்போதும் நலம

* டிரிப்டோபான்’ எனப்படும் அமினோ அமிலங்கள் பாலாடைக் கட்டியில் காணப்படுகிறது. இவை தூக்கமின்மையை போக்குவதுடன், உடல் வலியையும் நீக்கும்.

* பார்வைத் திறனை பேணும் ரெட்டினா செல்களின் செயல்பாட்டை தூண்டும் ஆற்றல் பாலாடைக் கட்டிக்கு உண்டு.

* செரிமானத்தை தூண்டும் சத்துப் பொருட்கள் இதில் காணப்படுவதால் சீஸ் சிறந்த செரிமான காரணியாக விளங்குகிறது.

Loading...

728

2