new BB1

தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் யோகா குறிப்புகள்

Loading...

தலைமுடி கொட்டுவதைத் தடுக்கும் யோகா குறிப்புகள்சீப்பினால் தலை முடியை வாரும் போது உங்கள் மனதில் பயம் தோன்றுகின்றதா? தலை முடி இழப்பினைத் தடுக்கும் இந்த யோக ஆசனங்களை முயற்சி செய்து பயிற்சி செய்யுங்கள்.

முடி கொட்ட ஆரம்பிக்கும் நிலையிலேயே யோக ஆசன சிகிச்சை ஏற்றுக் கொள்ளப்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். தடுப்பதற்குக் காட்டப்பட்டுள்ள முடிவுகள் குணமாக்குவதற்குக் காட்டப்பட்டவையை விட மேலானவை ஆகும். பழமையான இம்முறை உங்களுடைய முடி உதிர்தலை தடுக்க எவ்வாறு உதவ முடியும் என்று பாருங்கள்.

தலைமுடியின் நிலை, உங்களது பொது ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. உண்மையில் உங்களது முடியின் நிலை தான் உங்களுடைய உடல்நிலையின் பாராமீட்டர் (காற்றழுத்தமானி). அழகான தலைமுடி உங்களுடைய புகழ் மகுடம்.

தலைமுடி இழப்பிற்கு மன அழுத்தம், ஹார்மோன் குறைபாடு, தவறான உணவுப் பழக்கங்கள், நோய்கள், மருந்துகள், தலை முடிச்சாயம், மரபணுக் கோளாறுகள், புகைப்பிடித்தல் போன்ற பல காரணங்கள் உள்ளன.

தலைமுடி இழப்பைக் குறைக்க செய்யப்படும் யோகாவும், தியானமும் ஆரோக்கியமான முடியைத் தருவது மட்டுமின்றி, உங்கள் உடல் நலத்தையும் காக்கும். முழுமையான உடல், மன நலனை அதிகரிக்கச் செய்யும். தலையின் மேற்பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ஜீரணத்தைக் கூட்டி, பதட்டம், மன அழுத்தம் ஆகியவற்றைக் குறைக்கின்றது.

தலைமுடி இழப்பிற்குப் பயன்படும் ஆசனங்கள்
முன்னோக்கி குனியும் அனைத்து ஆசனங்களும் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் முடியின் வேர்ப்பகுதி வளம் பெரும். வெகு விரைவில் தலை முடியில் நல்ல மாற்றத்தினைக் காணலாம். கீழ்கண்ட ஆசனங்களை முயன்று பாருங்கள்.

அதோமுக ஸ்வானாசனம்
தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் இந்த ஆசனம் சைனஸ், ஜலதோஷம் இவற்றுக்கும் நல்லது. மனக்களைப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை இவற்றை அகற்றவும் உதவும்.

உத்தனாசனா
முன்னோக்கி குனியும் இந்த ஆசனம் களைப்பைக் குறைக்கவும், ஜீரணத்தை மேம்படுத்தவும், மாதவிடாய் சங்கடத்தைப் போக்கவும் உதவுகின்றது.

வஜ்ராசனா
வைர ஆசனம் என்றும் இது அழைக்கப்படுகின்றது. பிற ஆசனங்களைப் போன்று அல்லாமல் உணவு உண்ட உடனேயே இதைச் செய்யலாம். சிறுநீர் கோளாறுகள், எடை குறைதல், ஜீரணக் கோளாறுகள், இரைப்பையில் வாயு இவையனைத்தையும் சரியாக்க உதவும்.

அபானாசனா
அபானா என்பது ஜீரணப் பாதையில் உள்ள பிராணா வைக் குறிக்கும். அதுவே நச்சுத் தன்மையை நீக்கி உடலைச் சுத்தமாக்குகின்றது. இந்த ஆசனம் மனதிற்குத் தெளிவைத் தருகின்றது. மலச்சிக்கலையும் நீக்குகின்றது.

பவனமுக்தாசனா
இது வாயுவைக் குறைத்து, ஜீரணத்தை மேம்படச் செய்கின்றது. பின் முதுகுப் பகுதியிலுள்ள தசைகளை வலுவாக்குகின்றது.கீழ் வயிறு மற்றும் பிட்டத்திலுள்ள கொழுப்பினையும் குறைக்கின்றது.

சர்வாங்காசனா
தைராய்டு சுரப்பிகளை வளப்படுத்தவும், அதன் மூலம் சுவாச, உணவுப் பாதை, பிறப்புறுப்பு மற்றும் நரம்பு மண்டலத்தினை ஆரோக்கியமாக்கவும் உதவுகின்றது.

கபாலபாதி பிராணயாமம்
இதன் மூலம் மூளை திசுக்கள் அதிக பிராண வாயுவினைப் பெறுகின்றன. நரம்பு மண்டலத்திற்கும் இது நல்லது. நச்சுப் பொருட்களை உடலிலிருந்து நீக்கி விடுகின்றது. உடல் பருமன், சர்க்கரை நோய் ஆகியவற்றையும் குணப்படுத்துகின்றது.

பாஸ்த்ரிகா பிராணயாமம்
அதிகக் காற்று, பித்தம், கபம் ஆகியவை வெளியேற உதவி, நரம்பு மண்டலத்தைச் சுத்திகரிக்கின்றது. அனைத்து நோய்களையும் தடுக்கின்றது.

நாடி சோதன் பிராணயாமம்
இதயக் கோளாறுகளைத் தீர்க்கவும், ஆஸ்துமா, கீல் வாதம் (வீக்கத்துடன் கூடிய முட்டு வலி), மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, சோர்வு, கண் மற்றும் காதுப் பிரச்சனைகள் அனைத்திற்கும் உதவுகின்றது.

சமச்சீர் உணவுகள்
யோகாவுடன் உங்கள் உணவினையும் கவனித்துக் கொள்வது முக்கியமான விஷயம். புதிய பழங்கள், பசுமையான காய்கறிகள், பருப்பு வகைகள், முளைவிட்ட பயறுகள், தானியங்கள், பால் பொருட்கள் போன்றவை அடங்கிய சமச்சீர் உணவு உங்களது தலை முடி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் அளிக்கும்.

வேப்பிலை நீர்
வேப்பிலை நீரினால் உங்கள் கூந்தலை அலசினால் நல்லது. வாரத்திற்கு 3 அல்லது இரு முறை கழுவி, தேங்காய் எண்ணெய் வைத்துத் தடவி மசாஜ் செய்து சீராகத் தலை முடியை வாரி வந்தால் முடி வளர உதவும்.

ரசாயன பொருட்கள்
கடுமையான ரசாயனப் பொருட்கள் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள். மேற்கூறியவை அனைத்தையும் தவிர, தலை முடி கொட்டுவது இயற்கையே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை மாற்ற இயலாது. ஆனால் மேற்கண்ட குறிப்புகள் மூலம் கொட்டும் வேகத்தைக் குறைத்து விடலாம். உங்களுடைய முடி கொட்டும்

Loading...

728

2