new BB1

மன அழுத்தத்துடன் ஐ.டி-யில் வேலை செய்பவரா நீங்கள்? அப்ப அவசியம்

Loading...

மன அழுத்தத்துடன் ஐ.டி-யில் வேலை செய்பவரா நீங்கள்ஐ.டியில் வேலை பார்ப்பவரா நீங்கள்? வேலைப்பளு அதிகம் இருப்பதால், மன அழுத்தத்திற்கு உட்பட்டு கஷ்டப்படுகிறீர்களா? எப்போதும் ஒருவித குழப்பம் உங்கள் மனதில் நிலவுகிறதா? டென்சனாகவே இருக்கிறீர்களா? அப்படியெனில் இந்த கட்டுரை உங்களுக்கு ஏற்ற ஒன்று.

மன அழுத்தத்தை நீக்கும் ஆரோக்கியமான உணவுகள்!!! பொதுவாக சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்வோர் தான் எப்போதும் இணையதளத்தில் எதையேனும் தேடிக் கொண்டே இருப்பார்கள். இதற்கு அவர்களது வேலைப்பளுவும், டென்சனும் தான் காரணம்.

மன அழுத்தம் மூலமாக உங்கள் உடலில் ஏற்படும் விசித்திர மாற்றங்கள்!!! அப்படி தேடுபவர்களுள் பலர் தங்களது டென்சனை குறைப்பது எப்படி, மன அழுத்தத்தில் இருந்து எப்படி விடுபடுவது போன்றவற்றை கண்டிப்பாக தேடுவார்கள். நீங்களும் அப்படி தேடுகிறீர்கள் என்றால், தொடர்ந்து படியுங்கள்.

நீங்கள் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? ஏனெனில் இந்த கட்டுரையில் மன அழுத்தத்தைப் போக்குவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது. சரி, அதைப் பார்ப்போமா!!!

பாட்டு கேளுங்கள் அலுவலகத்தில் மிகுந்த டென்சனோடு இருக்கிறீர்களா? அப்படியெனில் அப்போது சற்று இடைவேளை எடுத்து, மென்மையான இசையை கேளுங்கள். அதிலும் உங்களுக்கு பிடித்த பாடலைக் கேளுங்கள். இதனால் இசையின் மூலம் மூளை மற்றம் உடலுக்கு நேர்மறை தாக்கம் ஏற்பட்டு, அதனால் டென்சன் மற்றும் இரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

குடும்பத்தினர் அல்லது நண்பனுக்கு போன் செய்யுங்கள் உங்களுக்கு யாரிடம் பேசினால் மனம் ரிலாக்ஸ் அடையுமோ, அவர்களுக்கு போன் செய்து சிறிது நேரம் பேசுங்கள். ஏன் உங்கள் அன்பான மனைவி அல்லது காதலிக்கு கூட போன் செய்து பேசுங்கள். இப்படி செய்வதன் மூலம் வேலைப்பளுவினால் ஏற்பட்ட டென்சன் குறையும். வேண்டுமெனில் முயற்சித்துப் பாருங்கள்.

மனதுடன் பேசுங்கள் மிகவும் டென்சனான மன அழுத்தத்தில் இருந்தால், சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து, கண்களை மூடி உங்கள் மனதுடன் நீங்கள் பேசுங்கள். என்ன பிரச்சனையோ அதை நீங்களே கண்களை மூடி பேசிப் பாருங்கள். இது சற்று முட்டாள்தனமாக இருந்தாலும், இதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

சரியாக உணவுகளை சாப்பிடுங்கள் மன அழுத்தத்தில் இருக்கும் போது, சரியான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். மேலும் எப்போதும் மொறுமொறுப்பான தின்பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்த்து, ஆரோக்கியத்தை வழங்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். முக்கியமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்த மீன் மற்றும் இதர கடல் உணவுகளை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

வாய் விட்டு சிரியுங்கள் வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்று சும்மா சொல்லவில்லை. உண்மையிலேயே வாய் விட்டு சிரிப்பதால், எண்டோர்பின்கள் வெளிப்பட்டு, அதனால் நல்ல மனநிலையை பெற்று, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலின் சுரப்பு குறைக்கப்படும். மேலும் சிரிப்பதன் மூலம் நரம்பு மண்டலம் ரிலாக்ஸ் ஆகும். மேலும் இது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

டீ டென்சன் அதிகரித்து, இரத்த அழுத்தம் குறைவான நேரத்திலேயே அதிகமாக உயரும். அப்போது டீ அல்லது காபி குடித்தால், அதில் இருக்கும் காப்ஃபைன் இன்னும் நிலையை மோசமடையத் தான் செய்யும். எனவே காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, க்ரீன் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அமினோ ஆசிட் நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸாக்கும்.

தியானம் மனதை அமைதிப்படுத்துவதற்கு சிறந்த வழி தியானம் செய்வது தான். தினமும் சிறிது நேரம் தியானம் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

இதற்கு காரணம், தியானம் செய்யும் போது மனம் சிறிது நேரம் ஒருநிலைப்படுத்தப்படுகிறது. இப்படி ஒருவருக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் திறன் வந்தால், அவர்கள் மன அழுத்தத்தினால் கஷ்டப்படமாட்டார்கள். மேலும் எந்த ஒரு சூழ்நிலையையும் திறமையுடன் கையாள்வார்கள்.

உடற்பயிற்சி உடற்பயிற்சி என்றதும் ஜிம் சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்வது என்று நினைக்க வேண்டாம்.

சிறிது நேரம் காற்றோட்டமாக திறந்தவெளியில் நல்ல சுத்தமான காற்றை சுவாசித்தவாறு சென்றாலே, மனம் ரிலாக்ஸ் ஆகும். அதுவே அலுவலகத்தில் டென்சனாக உணர்ந்தால், சற்று இடைவேளை எடுத்து, வெளியே சிறிது தூரம் அல்லது அலுவலகத்திலேயே சற்று தொலைவில் நண்பரை சந்தித்து வாருங்கள். இதுவும் மனநிலையை மாற்றும்.

Loading...

728

2