new BB1

முந்திரி பிஸ்தா ரோல்

Loading...

முந்திரி பிஸ்தா ரோல்முந்திரி – ஒரு கப்
பிஸ்தா – 3 தேக்கரண்டி
சர்க்கரை – 3/4 கப்
பொடித்த சர்க்கரை – 1 1/2 தேக்கரண்டி
ரோஸ் எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
நெய் – ஒரு தேக்கரண்டி

ரோல் செய்ய தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அவனை 100 டிகிரியில் முற்சூடு செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு ட்ரேயில் முந்திரியை பரப்பினாற் போல் போட்டு பத்து நிமிடம் அவனில் வைத்து எடுக்கவும். அதன் பிறகு பிஸ்தாவையும் ஒரு தட்டில் வைத்து 2 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பின்னர் முந்திரி, பிஸ்தா இரண்டையும் எடுத்து ஆற வைக்கவும். ஆறியதும் எடுத்து தனித்தனியே ஒரே சீராக, நைசாக பொடித்து வைத்துக் கொள்ளவும். பிஸ்தா பொடியுடன் பொடித்த சர்க்கரையை கலந்து வைத்துக் கொள்ளவும். (விரும்பினால் பச்சை கலரை சேர்த்துக் கொள்ளலாம்.)

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு நான்கு தேக்கரண்டி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சிம்மிலேயே கரைய விடவும்.

கரைந்து ஒரு கம்பி பதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைத்து பொடித்த முந்திரியையும் எசன்ஸையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கட்டியில்லாமல் கிளறவும்.

ஆறியதும் வெதுவெதுப்பான நிலையில் கையில் நெய் தடவிக் கொண்டு அதை பிசையவும் (கெட்டியாக இருக்கும்).

பின்பு ஒரு பாலீத்தீன் பேப்பரில் நெய் தடவி விட்டு முந்திரி கலவையில் பாதியை எடுத்து அதில் தட்டவும். ஒரு ஓரத்தில் பிஸ்தா பொடியை வைக்கவும்.

பிஸ்தா பொடியை வைத்து, டைட்டான ரோலாக சுருட்டி ஒரு விரல் அளவிற்கு துண்டுகள் போட்டு வைக்கவும்.

இதே போல் மீதி இருக்கும் கலவையிலும் செய்யவும். சுவையான ரிச்சான முந்திரி பிஸ்தா ரோல் தயார்.

Loading...

728

2