new BB1

மூளையின் அதிசய செயல்பாடுகள்

Loading...

எத்தனையோ அதிசயங்கள், கண்டுபிடிப்புகள் இருந்தாலும், எதுவும் மனித மூளையின் சக்திக்கு ஈடாகாது. அது என்ன என்பதை டாக்டர்.கமலிஸ்ரீபால் இங்கு விளக்குகிறார். உலகின் மிக சிறந்த உயர்ந்த இயந்திரங்கள், கம்ப்யூட்டர்கள் இருக்கும் இடத்திலிருந்தே அண்டத்தை ஆராயும் நாசா போன்ற பிரம்மாண்ட அமைப்புகள் உள்ளன.

9af29d2b-82de-454c-9fb3-a06743bbe060_S_secvpf
எங்கோ நடக்கும் நிகழ்வுகளை ஒரு விநாடியில் வீட்டில் உட்கார்ந்த படி பார்க்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சியை நாம் அடைந்துள்ளோம். என்றால், உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? இவை அனைத்தையும் விட அதிக சக்தி வாய்ந்தது நமது மூளைதான். இதன் வேகத்திற்கு எதனாலும் ஈடு கொடுக்க முடியாது. மூளையின் எடை 1200 கிராம் முதல் 1350 கிராம் அளவுதான். ஆனால் இதில் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

1 பில்லியன்: 100 கோடி. உலகின் மிகப்பெரிய அதிசயங்களில் ஒன்று மனித மூளை. உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக, பரபரப்பாக இல்லாமல் ரிலாக்ஸ்சாக இருக்கும் நேரத்தில்தான் புதுமையான புதுப்புது ஆலோசனைகளை கண்டு பிடிப்புகளைச் சொல்லும். மிகவும் சோர்வாக இருக்கின்றதா? அதிக மூளை உழைப்பு உங்களை களைப்பாக்கி விட்டது என்றால் சற்று ஓய்வு எடுங்கள்.

நல்ல குளியல் எடுங்கள். அப்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையில் புதுப்புது யோசனைகள் கிடைக்கும். நம்புங்கள் இது ஆராய்ச்சி பூர்வமான உண்மை.

* மனஉளைச்சல் மூளையை சுருக்கச் செய்து சிரிதாக்கி விடுகின்றது. சுருங்கிய மூளையால் அநேக பாதிப்புகள் ஏற்படும்.

* ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைப்பது மூளைக்கு சுமையாக இருக்கும். பொறுமையாக ஒன்றொன்றாக செய்தால் நிறைய பாதிக்கலாம்.

* சின்னச்சின்ன தூக்கம். அதாவது, 10-ம் நிமிடம் கண்மூடி அமைதியாக இருப்பது மூளையின் செயல் பாட்டுத்திறனை கூட்டும்.

* ஹிப்போகாம்பஸ் எனும் பகுதியில் தான் மூளை ஞாபகத்தினை பதிவு செய்யும். மூளை மிக வேகமாக அதிகமாக பதிவு செய்யும் போது பல விஷயங்களை பதிவு செய்ய மறந்து விடுகின்றது. 10 – 20 நிமிட குட்டித் தூக்கம் ஞாபகத் திறனை கூட்டுகின்றது.

படிக்கும் ஆற்றலை அதிகரிக்கின்றது. உங்கள் மூளையின் சிறந்த நேரம் எது நீங்களே உங்களை ஆராய்ந்து பாருங்கள். பலர் காலை நேரத்தில் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார்கள். மணி அடித்தார் போல் இரவு 9 மணிக்கு படுத்து தூங்கி விடுவார்கள். பலர் இரவு எட்டு மணிக்கு மேல் தான் படிப்பார்கள், எழுதுவார்கள். இரவில் வெகு நேரம் கண் விழித்திருப்பார்கள். காலை 8 மணிக்கு முன்னால் எழுந்திருக்க மாட்டார்கள்.

பொதுவில் அன்றாட செயல்களுக்கான மூளையின் சிறந்த நேரங்கள் காலை 9-11 மணி. மூளை சிறிதளவு ஸ்டிரெஸ் ஹார்மோன் கார்டிசால் இருக்கும். காரணம் படிப்போ, வேலையோ அதற்காக உங்களை தயார்படுத்தி பழகியிருப்பதால் நல்ல கவனத்தை செய்யும் வேலையில் உங்களால் செலுத்த முடியும்.

பகல் 1 – 2 மணி வரை :

தூக்க ஹார்மோன் வெகுவாக உடலில் குறைந்திருக்கும் என்பதால் மூளைக்கு கடினமான வேலைகளைக் கூட செய்யும் திறன் இருக்கும் என ஜெர்மன் ஆய்வுகள் கூறுகின்றன.

மாலை 3 – 6 மணி வரை :

இந்நேரத்தில் மூளை சற்று சோர்வடைவதால் மூளைக்கு சற்று குறைவான உழைப்பு கொண்ட வேலை, உடற்பயிற்சி, விளையாட்டு என இருப்பது நல்லது.

மாலை 6 – இரவு 8 மணி வரை :

இந்த நேரத்திலும் மூளை அதிக சோர்வு அடையாமல் இருக்கும். எனவே, இந்நேரம் உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்துடனும் செலவழிப்பது சிறந்ததாக இருக்கும்.

இரவு 8 – 10 மணி வரை  :

மெதுவாக உடல் சோர்ந்து விடும். பாட்டு கேட்க, படிக்க சிறந்த நேரம்.

இரவு 10 மணிக்குப் பிறகு  :

மூளை அன்று நடந்தவற்றை படித்தவற்றை உங்கள் தூக்கத்தின் பொழுது தொகுத்து வைக்கும். 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது மறுநாள் வேலைக்கு உடலையும், மூளையையும் தயாராக்கும். ஒரு மனிதன் முழுமையாக உருவாகி நல்ல ஆரோக்கியத்தோடு விளங்க பல அடிப்படை காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மரபணு, சிறு வயதில் அவருக்கு கிடைக்கும் சத்துணவு, தடுப்பு ஊசி, தாக்குதல் உண்டாக்கும் நோய்கள், சிறு வயது பள்ளி இவை அனைத்துமே காரணமாகின்றன. அது போல காலையில் சீக்கிரம் எழுந்து இரவில் 10 மணிக்கு தூங்குபவர்கள் உண்டு. இரவில் வெகு நேரம் கண் விழித்து காலை தாமதமாக எழுபவர்கள் அநேகர் உண்டு.

இது அவர்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் அவர்களை கட்டுப்படுத்துவதைப் பொறுத்து அமைகின்றது. ஆனால் நம் நாட்டில் காலை சீக்கிரம் எழுவதே சிறப்பான ஆய்வுகள் வலியுறுத்துகின்றன.

காலை 4 மணி எழுவது மிகவும் நல்லது
காலை 5 மணி எழுவது நல்லது
காலை 6 மணி எழுவது பரவாயில்லை
காலை 7 மணி எழுவது சோம்பேறி
காலை 8 மணி எழுவது படுசோம்பேறி
காலை 9 மணி எழுவது நோயாளி

இதற்கு மேல் எழுந்திருப்பவர்களைப் பற்றி கூறப்பட்டுள்ளவைகளை நான் எழுதவில்லை. மேற் கூறப்பட்டுள்ளது இரவு ஷிப்ட்களில் வேலை செய்பவர்களுக்கு பொருந்தாது. டாக்டர் கமலி ஸ்ரீபால்.

Loading...

728

2