new BB1

விண்வெளியில் அதிக நாள் ‘டேரா’

Loading...

விண்வெளியில் அதிக நாள் 'டேரா'மனித குலத்திலேயே அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய சாதனைக்காக ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார், ரஷ்ய விண்வெளி வீரர் ஜென்னாடி படல்கா.
பல நாடுகளின் கூட்டு முயற்சியாக இயங்கும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐ.எஸ்.எஸ்.), 804 நாட்கள் தங்கி ஆய்வுகளை செய்ததற்காக படல்காவுக்கு, இந்த பெருமை கிடைத்திருக்கிறது. இதற்கு முன், 1998 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில், இன்னொரு ரஷ்ய விண்வெளி வீரரான செர்ஜி க்ரிகாலெவ், ஆறு முறை விண்வெளிக்கு சென்று, 803 நாட்கள், 9 மணி நேரம், 41 நிமிடங்கள் தங்கி சாதனை செய்திருந்தார்.
ஆனால், அவரை முந்தியிருக்கும் படல்கா, மேலும் தன் சாதனையை நீட்டிக்கக்கூடும். அவர் செப்டம்பரில் தான் ஐ.எஸ்.எஸ்., நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்புவார். அப்போது அவர் 877 நாட்களை விண்வெளியில் கழித்திருப்பார். இந்தியாவின் சார்பாக, ரஷ்ய திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு சென்ற வீரர் ராகேஷ் சர்மா, மொத்தம், 7 நாட்கள், 21 மணி நேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் கழித்திருக்கிறார்.

Loading...

728

2