new BB1

அஜித்தை கட்டி அணைத்து அழுத மாற்றித்திறனாளி

Loading...

அஜித்தை கட்டி அணைத்து அழுத மாற்றித்திறனாளிநாம் முன்பே சொன்னதுபோல ஒரு நடிகருக்கான ரசிகர் கூட்டம் என்பது அவருடைய நடிப்பக்கு கிடைத்த பரிசு அல்ல. தாங்கள் செய்யும் நற்பணிகளாலும், தங்களின் நடவடிக்கையாலும் சினிமா ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்தும் இதற்கு விதிவிலக்கல்ல. இவர் ஏற்கெனவே தன்னை தேடி வருபவர்களுக்கு நிறைய உதவிகள் செய்து வருகிறார். தானே சென்றும் நிறைய உதவிகளை விளம்பரம் இல்லாமல் செய்து வருகிறார். தன்னுடன் பணிபுரியும் லைட் பாய் முதல் மற்ற கலைஞர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் பேசி அவர்களின் குடும்ப சூழ்நிலை தெரிந்து கொள்கிறார். அவர்களின் தேவையறிந்து அவர்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.

சமீபத்தில் அஜித் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது கால் நடக்க முடியாத ஒரு மாற்றுத் திறனாளி அஜித்தை சந்திக்க வந்துள்ளார். தன் நிலைமையை அஜித்திடம் கூறி, மூன்று சக்கர வண்டி இருந்தால் தனக்கு வசதியாக இருக்கும் என்றாராம். இதை கேட்ட அஜித்… பிறகு சந்திக்கலாம். நாளை வாருங்கள் என்றாராம். ஏதாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்த அந்த மாற்றுத் திறனாளி ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

இருந்தாலும் அதே நேரத்துக்கு மறுநாள் சென்றுள்ளார். அடுத்த நாள் சென்ற அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அஜித். அங்கே அந்த மாற்றுத் திறனாளிக்காக ஒரு மூன்று சக்கர சைக்கிள் ஒன்று காத்து கொண்டிருந்ததாம். அதனை கண்ட அவர் ஆனந்த கண்ணீர் விட்டு அஜித்தை கட்டிக் கொண்டாராம். மேலும் அவருக்கு ஒரு தொகையும் கொடுத்து அனுப்பி இருக்கிறார் ‘தல’ அஜித்.

Loading...
728
2