new BB1

அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெற சில டிப்ஸ்

Loading...

அடர்த்தியான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெற சில டிப்ஸ்கண்களின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் புருவங்களும், கண் இமைகளும் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதனால் தான் கண்களை கவர்ச்சியாக காண்பிக்க மேற்கொள்ளும் மேக்கப்பில் கண் இமைகளுக்கு மஸ்காரா மற்றும் புருவங்களை அழகாக வடிவமைக்கின்றனர். சிலருக்கு புருவங்களே தென்படாது. அத்தகையவர்கள் பென்சில் கொண்டு புருவங்களை வரைத்து வெளிக்காட்டிக் கொள்வார்கள். இப்படியே எத்தனை நாட்கள் தான் பென்சில் கொண்டு புருவங்களை வெளிக்காட்டுவீர்கள். எனவே தமிழ் போல்ட்ஸ்கை புருவங்கள் மற்றும் கண் இமைகள் நன்கு அடர்த்தியாகவும், கருமையாகவும் வளர்வதற்கு ஒருசில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. அவற்றைப் படித்து பின்பற்றி, அழகான புருவங்கள் மற்றும் கண் இமைகளைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய் தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை கண் இமைகள் மற்றும் புருவங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால், கண் இமைகள் மற்றும் புருவங்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.

தினமும் 5 நிமிடம் ஆலிவ் ஆயில் கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் இரவில் படுக்கும் முன், இச்செயலை செய்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்

Loading...
728
2