new BB1

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள் பேஷியல்

Loading...

அழகுக்கு அழகு சேர்க்கும் ஆப்பிள் பேஷியல் ஆப்பிள் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்காக தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிடுகின்றோம்.

ஆனால் அவ்வாறு ஆப்பிளை சாப்பிட்டால் உடலானது ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகாகவும் மாறும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி- ஏஜிங் முகத்தில் மற்றும் உடலில் தோன்றும் வயதான சுருக்கங்களை போக்குவதோடு, ஆப்பிள் போன்ற கன்னங்களையும் பெற முடியும்.

சருமத்தின் பளபளப்பை அதிகரிக்க, 2 டேபிள்ஸ்பூன் ஆப்பிள் விழுது, 1ஃ2 ஸ்பூன் பால் பவுடர், 1ஃ2 ஸ்பூன் பார்லிபவுடர் பால் கலந்து முகத்தில் தேய்க்கவும்.

ஆப்பிள் பழம் ஒரு சிறந்த கிளின்சர். இந்த பழத்தில் உள்ள அமிலத்தன்மை, முகத்தில் இருக்கும் தேவைக்கு அதிகமான எண்ணெய் பசையை நீக்கும்.

அத்தகைய ஆப்பிள் கிளின்சரை செய்ய, முதலில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் ஜூஸ், 2 டேபின் ஸ்பூன் பால் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேனை கலந்து, முகத்தில் தடவி 3-4 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் ஆப்பிளின் மகிமை, இதன் முடிவில் நன்றாக தெரியும்.

ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் முக்கி முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் குளுமையாகவும் இருக்கும்.

ஆப்பிள்சாறு, வெந்தயத்தூள், சீயக்காய்த்தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து தலைக்கு தேய்த்து அலசினால் முடி பிசுபிசுப்பு நீங்கிவிடும்.

ஆப்பிளானது பிம்பிள் மற்றும் முகத்தில் இருக்கும் கொப்புளங்கள், புண் போன்றவை நீக்கும். அதற்கு அதனை மாஸ்க் போல் செய்ய வேண்டும். அதற்கு ஆப்பிள் துண்டுகளை, முகத்தில் தேய்க்க வேண்டும்.

இல்லையென்றால் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் பேஸ்டுடன், 1 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு பேஸ்ட் சேர்த்து, முகத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகமானது மென்மையாக இருக்கும்.

Loading...
728
2