new BB1

ஆசஸ் FONEPAD 7 (FE171CG) குரல் அழைப்பு டேப்லட் நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியல்

Loading...

ஆசஸ் FONEPAD 7 (FE171CG) குரல் அழைப்பு டேப்லட் நிறுவனத்தின் வளைத்தளத்தில் பட்டியல்ஆசஸ் நிறுவனம் அதன் புதிய சமீபத்திய டேப்லட்டான Fonepad 7 (FE171CG) டேப்லட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய குரல் அழைப்பு டேப்லட்டை நிறுவனத்தின் வளைத்தளத்தில் அதன் குறிப்புகளுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் இந்த டேப்லட்டின் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை.
டூயல் சிம் ஆதரவு கொண்ட ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் இயங்குகிறது. டேப்லட்டில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மேம்படுத்தல் பற்றி இன்னும் அறிவிக்கப்பவில்லை. இந்த டேப்லட்டில் ஃபின்கர்பிரிண்ட் கோட்டிங் எதிர்ப்பு உடன் 1024×600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, இடம்பெறுகிறது.
இந்த குரல் அழைப்பு டேப்லட்டில் 1 ஜிபி அல்லது 2 ஜிபி ரேம் உடன் இணைந்து 1.2GHz இன்டெல் ஆட்டம் Z2520 பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட்டில் 2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, மற்றும் பின்புற கேமராவில் 8 மெகாபிக்சல் அல்லது 5 மெகாபிக்சல் போன்ற பல்வேறு வேறுபாடுகளில் கிடைக்கின்றன.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8 ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு, வருகிறது. மேலும் சாதனத்தில் 5 ஜிபி லைஃப்டைம் ஆசஸ் வெப் ஸ்டேரேஜ் ஸ்பேஸ் கொண்டுள்ளது. ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட் இணைப்பு விருப்பங்கள் Wi-Fi, ப்ளூடூத், 2ஜி, 3ஜி, ஜிஎஸ்எம், மைக்ரோ -யுஎஸ்பி, FM ரேடியோ, மற்றும் ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும்.
துரதிஷ்டவசமாக நிறுவனம் பேட்டரி ஆதரவு பற்றி குறிப்பிப்படவில்லை. எனினும் Fonepad 7 (FE171CG) டேப்லட்டில் 110.6x196x7.9mm அளவிடுகிறது மற்றும் 280 கிராம் எடையுடையது. இந்த டேப்லட் கருப்பு, வெள்ளை, தங்கம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ண வகைகளில் வருகிறது. மேலும், இதில் காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் ஆம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
ஆசஸ் Fonepad 7 (FE171CG) டேப்லட் குறிப்புகள்:
டூயல் சிம்,1024×600 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 7 இன்ச் WSVGA ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம்,1.2GHz இன்டெல் ஆட்டம் Z2520 பிராசசர்,2 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா, 5 மெகாபிக்சல் பின்புற கேமரா,மைக்ரோSD அட்டை வழியாக விரிவாக்கக்கூடிய 8 ஜிபி அல்லது 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,Wi-Fi, ப்ளூடூத், 2ஜி, 3ஜி, ஜிஎஸ்எம், மைக்ரோ -யுஎஸ்பி, FM ரேடியோ,ஜிபிஎஸ்/எ- ஜிபிஎஸ்,ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட்,280 கிராம் எடை.

Loading...
728
2