new BB1

ஆவாரம் பூ

Loading...

தமிழகம் முழுவதும் தானாக விளைந்து வீணாக போகும் மூலிகைகளில் இதுவும் ஒன்று.
செடி முழுக்க மருத்துவப்பயன் உடையது. பூவை தண்ணீரில் காய்ச்சியோ அல்லது பாலில் கொதிக்க வைத்தோ சாப்பிட்டு வந்தால் உடல் நாற்றம் ,உடலில் உப்பு பூத்தல், நா வறட்சி ஆகியன நீங்கும்.

ஆவாரம் பூ

இதன் விதை சூரணம்,உடலுக்கு வலு கொடுக்கும்,காமம் தூண்டும். முழுச்செடியின் சூரணம் நீரிழிவு(சர்க்கரை நோய்) உடல் மெலிவு ,எரிச்சல் ,உடல் பலகீனம்,மயக்கம்,மூச்சுத்திணறல் ஆகியவற்றை போக்கும்.
இதன் பட்டையை பொடி செய்து வைத்துக்கொண்டு தண்ணீரில் இட்டு சுண்டக்காய்ச்சி கஷாயம் செய்து குடித்தால் நீரிழிவு,சிறு நீர்க்கோளாறுகள்,தாக வறட்சி ஆகியவை தீரும்.

நாட்டு மருந்து கடைகளில் சீயக்காய் பொடி தயாரிக்க மூலிகைகள் வாங்கும்போது அதில் ஆவாரம் பூவும் இடம்பெறும்.அரைத்து தேய்த்து குளித்தபிறகு ஒரு புத்துணர்வு கிடைக்கும் பாருங்க அது எந்த சோப்பிலும் கிடைக்காது.

ஆவாரம் பூ பூத்துக் குலுங்கும் காலங்களில் கண்ணில் பட்டுவிட்டால் விடாதீர்கள் , வீட்டில் சாம்பார்,காரக்குழம்பு எல்லாவற்றிலும் இந்த பூவை வதக்கி சேர்த்து விடலாம்.

அதேபோல் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொள்ளலாம் தேநீர்,காஃபிக்கு கொஞ்சம் இடைவெளி கொடுக்க நினைக்கும் போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடலாம். சமயங்களில் பாலுடனும் சேர்த்தும் குடிக்கலாம். வாசனை அருமையாக இருக்கும்,சுவையாகவும் கூட இருக்கும்.
கூட்டு செய்து சாப்பிட்டு பாருங்க. கருத்த சொல்லுங்க.

ஆவாரம் பூ கூட்டு

தேவையானவை:
1.ஆவாரம்பூ – இரண்டு கூறு (சுமார் 200 கிராம்)
2. துவரம் பருப்பு – 1/4 கப்
3. கடலை பருப்பு – 1/4 கப்
4. மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
5. சாம்பார் பொடி – 1 1/2 தேக்கரண்டி
6. காய்ந்த மிளகாய் -2
7. சீரகம் – 1/4 தேக்கரண்டி
8. தேங்காய் துருவியது – 2 மேசை கரண்டி
9. வெங்காயம் -1 பெரியது
10. தக்காளி – 1
11. கருவேப்பிலை – 1 இணுக்கு
12. கொத்தமல்லி இலை- சிறிதளவு
13. கடுகு – 1/4 தேக்கரண்டி
14. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
15. பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை
16. எண்ணை – 1 மேசை கரண்டி
17. உப்பு – தேவையான அளவு

செய்முறை:
ஆவாரம்பூவை காம்பு நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்பு, கடலை பருப்பு அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, தேவையான அளவுக்கு உப்பும் சேர்த்து 200 மி.லி. தண்ணீர் சேர்த்து வெயிட் போட்டு மூடி 4 விசில் வந்ததும் இறக்கிவிடவும்.

தேங்காய் துருவலையும், சீரகத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
விசில் அடங்கியதும் குக்கரை திறந்து அதில் சுத்தம் செய்த ஆவாரம் பூவை போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் நன்றாக கிளறி விட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை அதில் சேர்த்து இன்னும் 5 நிமிடம் கொத்திக்கவிடவும்.

எண்ணையை காயவைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, இரண்டாக கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயதூள் இவைகளை போட்டு தாளித்து குக்கரில் சேர்க்கவும்.
கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சிறியதாக நறுக்கி கூட்டில் சேர்த்து இறக்கவும்.

Loading...
728
2