new BB1

இன்றைய ராசி பலன் 2015.08.19

Loading...

raasipalan1111

மேஷம்
சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உதிரி வருமானங்கள் உள்ளம் மகிழும் விதத்தில் வந்து சேரலாம்.

ரிஷபம்
மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டும். சொத்துக்களால் லாபம் உண்டு. கல்யாணக் கனவுகள் நனவாகலாம். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காகும்.

மிதுனம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். சுற்றுப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர்களின் மீது பிரியம் கூடும். நட்பு வட்டம் விரிவடையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும்.

கடகம்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உடன் பிறப்புகளால் உற்சாகம் அதிகரிக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.

சிம்மம்
நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். பிரியமான சிலரைத் தேடிச் சென்று சந்திப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

கன்னி
வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். வீட்டுக்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. கை மாற்றாகக் கொடுத்த தொகை கைக்கு வந்து சேரும்.

துலாம்
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். அத்யாவசியப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. தொழில் ரீதியான பயணங்கள் ஏற்படலாம். தெய்வ வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சகம்
வருமானம் திருப்தி தரும் நாள். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவங்கள் நடைபெறலாம். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு
நினைத்தது நிறைவேறும் நாள். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

மகரம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். புண்ணிய காரியங்களுக்கும் செலவிட்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். புன்சிரிப்புடன் எதையும் செய்வீர்கள்.

கும்பம்
வழிபாட்டின் மூலம் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளன்றை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவிய சிலரின் சந்திப்பு கிட்டும்.

மீனம்
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். பயணங்கள் செல்வதில் நாட்டம் செல்லும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வாழ்க்கைத் துணை வழியே வரவு வந்து சேரும்.

 

Loading...
728
2