new BB1

இன்றைய ராசி பலன் 2015.08.26

Loading...

raasipalan1111

மேஷம்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். தைரியத்தோடு செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். சமுதாயப் பணியில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

ரிஷபம்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். பொதுப் பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. ஆதாயம் இல்லாத அலைச்சல்களால் மனச்சோர்வு ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.

மிதுனம்
உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். ஆடை&ஆபரணச் சேர்க்கை உண்டு. கூட்டுத் தொழில் தனித்தொழிலாக மாற எடுத்த முயற்சி வெற்றி தரும்.

கடகம்
நம்பி வந்தவர்களுக்கு உதவி மகிழும் நாள். இனத்தார் பகை மாறி பாசம் அதிகரிக்கும். பழைய பாக்கிகளை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

சிம்மம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். பற்றாக்குறை பட்ஜெட் இனி மாறும். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உதிரி வருமானம் பெருகும்.

கன்னி
வியக்கும் செய்தி வீடு தேடி வரும் நாள். பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

துலாம்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும். தொழில் நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். ஆற்றல் மிக்க ஒருவர் உங்களுக்கு ஒத்துழைப்பு செய்வர்.

விருச்சகம்
பணவரவு திருப்தி தரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். எந்தக் காரியமும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.

தனுசு
நட்பு வட்டம் விரிவடையும் நாள். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.

மகரம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். வருமானத்தை பெருக்கும் வழியை அறிந்து கொள்வீர்கள். குடும்ப ஒற்றுமைக்கு பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக் கொள்வது நல்லது.

கும்பம்
முன்னேற்றம் கூடும் நாள். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவை அதிகப்படுத்த தகுந்த முயற்சிகள் செய்வீர்கள்.

மீனம்
வளர்ச்சி கூடும் நாள். வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். பிறருக்கு பொறுப்புச் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும்.

– See more at: http://sudar24.com/7636#sthash.9hcDCaCi.dpuf

 

Loading...
728
2