new BB1

இரத்தத்தை சுத்தி செய்யும் தைம்

Loading...

தைம் மலைப் பாங்கான இடங்களில் நன்கு வளரும். தண்ணீர் தேங்கக்கூடாது. வடிகால் வசதி இருக்க வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் வளரக்கூடியது.

இரத்தத்தை சுத்தி செய்யும் தைம்

இதன் தாயகம் ஸ்பெயின், தெற்கு ஐரோப்பாவில் இருந்தது. ரோமானியர் அதிகம் பயிரிட்டனர்.

இதிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். இது மருத்துவ குணம் உடையது. இவை மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை பூக்கும்.

தைம்மை கிரேக்கப் பெண்கள் வீரத்தின் சின்னமாக வீரர்களுக்குக் கொடுப்பார்கள். அரண்மனையை சுத்தம் செய்ய இதன் இலைகளை ஊரவைத்து அதன் நீரில் சுத்தம் செய்தார்கள்.

தைமின் மருத்தவப்பயன்கள் :

மூலிகைப் பயிரான தைம் ஓர் நல்ல மருத்துவ குணமுடைய மூலிகை. தைமின் தைலம் காரத்தன்மையுடையது. நறுமணம் கொண்டது. இனிப்பு சுவை கொண்டது. நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும். மனவளர்ச்சியைப் பெருக்கும். நச்சுப்புழுக்களைக் கொல்லும்.

நெஞ்சுவலி, காசநோய், மார்புச்சளி, முதலிய சிகிச்சைக்கு இந்த ஆயில் உதவும்.

பித்த நீரையும், இரத்தத்தையும் இளக்கும். சிறுநீரகம், கண் முதலியவற்றின் சிகிச்சைக்கும், இரத்தத்தைச் சுத்தி செய்வதற்கும் பயன்படும். சரும நோய்களின் சிகிச்சையில் குடற் பூச்சிகளைக் கொல்லும்.

தைம் தலைப் பொடுகைப் போக்கும். ஏழு தேக்கரண்டியளவு வறண்ட தைம் இலைப்பொடியை இரண்டு கப் நீரில் பத்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அதை குளித்த தலை முடிக்குத் தடவி தேய்த்து விட்டால் பொடுகு குணமாகும்.

தைம் எண்ணெயை சிறிதளவு வாயில் விட்டுக் கொப்பளிக்க தொண்டை வலி குணமாகும். இந்த எண்ணெயால் இருமல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு, தோல் அறிப்பு, சிறுநீர் தாரைசுத்தம், டான்சில் வீக்கம், வாய்ப்புண், வாய் நாற்றம் முதலியன குணமாகும். இது இரத்தம் உறைவதை (கிளாட்) குணப்படுத்தும் தன்மையுடையது.

Loading...
728
2