new BB1

உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!

Loading...

உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!நீங்கள் அளவுக்கு அதிகமாக சோர்வை உணர்கிறீர்களா? அதிலும் எந்த ஒரு கடினமாக பொருளை தூக்காமல் அல்லது எந்த ஒரு கடுமையான வேலையையும் செய்யாமல், எந்நேரமும் சோர்வு ஏற்படுகிறதா? அப்படியெனில் உங்கள் உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் அல்லது கழிவுகள் தேங்கியுள்ளது என்று அர்த்தம். உடலின் மூலை முடுக்குகளில் சேர்ந்துள்ள நச்சுக்களை வெளியேற்றும் அற்புத ஜூஸ்!!! இந்த கழிவுகளானது உண்ணும் உணவுகள், பருகும் பானங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றின் மூலம் உடலில் சேர்கிறது. சரி, நம் உடலில் கழிவுகள் அதிகம் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கும் புகழ்பெற்ற மற்றும் சிறப்பான 7 உணவுகள்!!! ஏனெனில் இங்கு உடலில் அளவுக்கு அதிகமாக நச்சுக்கள் மற்றும் கழிவுகள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. சரி, இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!!!
மந்த நிலை உடலில் தேங்கும் சில டாக்ஸின்கள் மனநிலையை மாற்றி, ஒருவித மந்த நிலையுடனும், குழப்பமான மனதுடனும் இருக்கக்கூடும்.
உடல் எடை பிரச்சனைகள் உடலில் சேரும் ஒரு வகையான டாக்ஸின்களான கெட்ட கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்தால், அதனால் உடல் எடை பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்
தலைவலி உடலில் அளவுக்கு அதிகமான டாக்ஸின்கள் சேர்ந்தால், கடுமையான தலைவலியை உணரக்கூடும். மேலும் சில ஃபாஸ்ட் புட் உணவுப் பொருட்களை உண்ட பின்னர் தலை வலி ஏற்படுவதற்கு காரணம், அதில் உள்ள டாக்ஸிக் பொருள் தான்.
சரும பிரச்சனைகள் சருமத்தில் திடீரென்று பருக்கள் அல்லது சருமத்தில் அரிப்புகள் ஏற்பட்டால், உடலில் கழிவுகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.
சோர்வு நீங்கள் எப்போதும் சோர்வுடன் இருப்பது போல் உணர்ந்தால், அது உடலில் நச்சுக்கள் அதிகம் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும். அதிலும் மன அழுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அதனால் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, அதன் மூலம் சோர்வு ஏற்படுகிறது

Loading...
728
2