new BB1

உணர்வு வெளிப்பாடான அழுகையை பற்றி !

Loading...

உணர்வு வெளிப்பாடான அழுகையை பற்றி !
உணர்வு வெளிப்பாடான அழுகையை பற்றி !
அழுகை’ என்பது எமது உணர்வுகளின் வெளிப்பாடு. அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனையும் அரவணைக்க வேண்டும். அழுகை இல்லாமல் போனால் கூட பிரச்சினைதான். அதனையும் உள்ளத்தால் ஏற்று தேவையான போது அழுவதுதான் ஆரோக்கியமான ஒரு மனிதனின் உணர்வின் வெளிப்பாடாக இருக்கமுடியும்.
ஏற்றதாழ்வான வாழ்வில் அழுகையெனும் ஒரு உணர்விற்கு இடம்தரலாமா ? என்ற ஒரு கேள்வி இருந்தாலும், மனிதர்களின் மன அழுத்தம் அதிகரிக்கின்ற போது அதை சரியாக்குவது இந்த அழுகை மட்டுமே
மக்களில் சிலர் அழுதபின் நார்மலாக இருப்பதாகவும் மனசு லேசாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.
அழுகை என்பது எல்லோரிடமும் வெளிப்படுவதில்லை, அது அன்பு கொண்டவர்களை மட்டுமே எட்டிப் பார்க்க நினைக்கும் ஓர் உன்னத வெளிப்பாடு..!மருத்துவ ரீதியாக நகைச்சுவைக்கும் கண்ணீருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது,அழுகின்ற போது உங்களின் அத்துணை உணர்வுகளையும் துடைத்தெறிகின்ற இதை ரப்பர் அதாவது துடைப்பான் என்றும் சொல்லலாம்.
அழுகை’ என்பது எமது உணர்வுகளின் வெளிப்பாடு. அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனையும் அரவணைக்க வேண்டும். அழுகை இல்லாமல் போனால் கூட பிரச்சினைதான். அதனையும் உள்ளத்தால் ஏற்று தேவையான போது அழுவதுதான் ஆரோக்கியமான ஒரு மனிதனின் உணர்வின் வெளிப்பாடாக இருக்கமுடியும்.
உலகத்தை பார்க்கின்ற போதும் அழுகையே ஆரம்பம்,பள்ளி செல்லும் முதல் நாளும் அழுகையில் ஆரம்பம் , நண்பர்கள் கிடைக்கின்ற போதிலும் நட்புக்கள் பிரிகிற போதிலும் , தாய் தந்தையரின் இழப்பிலும் , உறவுகளின் இழப்பிலும் காதலின் துவக்கத்திலும் முடிவிலும் உரிமைப்பெற்று நம்முடன் இணைந்திருப்பது ,நம்மை வெளிப்படுத்துவது இந்த அழுகையே ..! என்ன ஏது என்று நாம் அறியும்முன்னே நம்மிலிருந்து வெளிப்படுவது இந்த அழுகையே ..!
‘அழுகை’ என்பதும் மனிதனின் விரும்பி, ஆதரித்து உள்வாங்கும் உணர்வாக எப்போதும் இருக்கணும்,உங்களுக்கு அழவேண்டும் போல் இருந்தால் மனது சமாதான படும் வரை அழுங்கள்,யோசிக்காதீர்கள்..
வலிதரும் வார்த்தைகளை போலவே கண்ணீர் தரும் வார்த்தைகளும் உண்டு.. சிரிப்பவன் அழுவதற்கு சில நொடிகள் போதும்.. அழுபவன் சிரிப்பதற்கு நேரம் அதிகமாகும். அழுகையின் சக்தி வலியது

Loading...
728
2