new BB1

உதட்டு லிப்ஸ்டிக் போடுவதற்கான அழகு குறிப்பு

Loading...

உதட்டு லிப்ஸ்டிக் போடுவதற்கான அழகு குறிப்புமுதலில் உதடுகளின் மேல் ஃபவுண்டேஷன் தடவ வேண்டும் . அதன்பிறகு லிப்ஸ்டிக் போட்டால் அது நீண்ட நேரம் இருக்கும். லிப்ஸ்டிக்கை அப்படியே தடவக்கூடாது. முதலில் உதடுகளுக்கு லிப் பென்சிலால் அவுட்லைன் வரைந்து கொள்ள வேண்டும். பிறகு அவுட் லைனுக்குள் தடவ வேண்டும்.

லிப்ஸ்டிக் போட்டதும் இரண்டு உதடுகளுக்கும் இடையில் டிஸ்யூ பேப்பரை வைத்து அழுத்தி விட்டு அடுத்த கோட் போடலாம். டிஷ்யூ பேப்பரால் அழுத்தியதும். சிறிதளவு பவுடரைத் தடவி விட்டு இன்னொரு கோட் லிப்ஸ்டிக் போட்டால் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் இருக்கும்.

மென்மையான பளபளப்பான உதடுகளை விரும்புவோர் லிப்ஸ்டிக் போட்டதும் அதன் மேல் லிப்கிளாஸ் தடவலாம்.

ஆனால் அதை நேரடியாக உதடுகளின் மேல் தடவக்கூடாது அதே மாதிரி உதடுகளின் ஒரங்களுக்குச் செல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதடுகளின் வடிவம் பெரியதாகவோ ரொம்பவும் சிறிய தாகவோ இருந்தாலும் கவலைபட வேண்டியதில்லை பெரிய உதடுகளை சரியாக்க லிப்லைனரால் அவுட் லைன் போடும் போது சிறியதாகப் போட்டு அதற்குள் லிப்ஸ்டடிக்கை நிரப்பலாம் .

அதே மாதிரி சிறிய உதடுகளைப் பெரிதாக்கி லிப்ஸ்டிக் போடலாம் அவுட் லைனுக்கு வெளியே உள்ள உதட்டினை ஃபவுன் டேஷன் மற்றும்’ பவுடர் தடவி சரும நிறத்தோடு ஒன்று ம்படி செய்து விடலாம்.

உங்கள் நகச் சாயமும் உதட்டுச் சாயமும் ஒரே நிறத்தில் இருந்தால் அழுகு மேலும் அதிகரிக்கும். உதடுகளை நல்ல முறையில் பாரமரிக்க தரமான லிப்ஸ் டிக்கையே உபயோகிக்க வேண்டும். தரமில்லா லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதால் உதடுகளில் அரிப்பு எரிச்சல் மற்றும் வெடிப்புகள் விழக்கூடும்.

ஒருவர் உபயோகித்த லிப்ஸ்டிக்கை அடுத்தவர் உபயோகிக்கும் பொழுது தொற்று, உடல் ஆரோக்கியம் குறைவு ஏற்படும் . எனவே வெளியில் செல்லும் போது உங்களுக்கென்று கைப்பையில் தனியாக லிப்ஸ்டிக்கை எடுத்துச் செல்லுங்கள்.
.

வெதுவெதுப்பான நீர் குளிர்ந்த நீர் இவற்றை மாறி மாறி 10 நிமிடங்களுக்கு உதடுகளில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு மூன்று முறை கொடுத்து வந்தால் உதடுகள் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும்.

ஒருமுட்டையின் வெள்ளைக்கருவில் அரை டீஸ்பூன் பாதாம் பருப்பைத்தூள் செய்து ஒரு டீஸ்பூன் மில்க் க்ரீம் கலந்து உதடுகளில் தட்வினால் உலர்ந்திருக்கும் உதடுகள் புத்துணர்வு பெறும்.

சிலருக்கு உதடுகளின் இரு ஒரங்களிலும் புண்கள் போல் வெள்ளையாக இருக்கும். இது வைட்டமின் குறைவினால் ஏற்படக்கூடியது. வைட்டமின் பி உள்ள உணவுப் பொருள்களை உணவில் அதிகம் சோத்துக் கொண்டால் இதை நிவர்த்தி செய்யலாம்.

உதடுகளில் காணப்படும் வெடிப்பிற்கு நெய் அல்லது வெண்ணேய் தொடர்ந்து தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

10 கிராம் டீத்தூளை 50 மி.லி நீருடன் கொதிக்கவிட வேண்டும். ஆறியதும் வெதுவெதுப்பான உதடுகளுக்கு அந்த நீரை ஒத்தடம் கொடுத்தால் உதடுகளிலுள்ள கறுப்பு மறையும்.

Loading...
728
2