new BB1

உளுந்தங்களி

Loading...

உளுந்தங்களி

என்னென்ன தேவை?

உளுந்து – 250 கிராம்
அரிசி – 50 கிராம்
நெய் – 50 மில்லி
தேங்காய்பால் – ஒரு மூடியை
துருவி எடுக்கவும்
பனை வெல்லம் – 250 கிராம்
எப்படி செய்வது?

உளுந்தையும், அரிசியையும் ஊற வைத்து, உதிரி மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் தேங்காய்ப்பாலை விட்டு கரைக்கவும். அதன்பின் அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். மாவு நன்கு வெந்தவுடன் பனைவெல்லம் சேர்த்து, கட்டி பிடிக்காத வகையில் கிளற வேண்டும். பின் நெய் விட்டு கிளறி இறக்கினால் உளுந்தங்களி ரெடி. இதே போல் தேங்காய்ப்பால் இல்லாமல் தண்ணீர் விட்டும் உளுந்தங்களி செய்யலாம். மேலும் உளுந்தையும், அரிசியையும் இளம் வறுப்பாக வறுத்து, பவுடர் செய்து அந்த மாவு மூலமும் முன்பு கூறியபடி களி செய்யலாம். உளுந்துடன் வெந்தயத்தை சேர்ந்து, வெந்தயக்களி கிண்டலாம். இதுவும் உடலுக்கு நன்கு குளிர்ச்சியை தரும்.

Loading...
728
2