new BB1

கறிவேப்பிலை பத்தியக் குழம்பு

Loading...

என்னென்ன தேவை?

கறிவேப்பிலை பத்தியக் குழம்பு

நல்லெண்ணெய் – 1/4 கப்,
புளி – 1 எலுமிச்சை அளவு,
தண்ணீர் – 1/2 கப்,
உப்பு, பெருங்காயம் – தேவைக்கேற்ப.

வறுத்து அரைக்க…

மிளகு – 2 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி விதை – 1 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்,
பயத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய் – 4,
கறிவேப்பிலை – 1/2 கப்.

எப்படிச் செய்வது?

புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மிளகு, சீரகம், கொத்தமல்லி விதை, பருப்பு வகைகளை வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். வறுத்தவை ஆறியதும் நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும். புளி கரைத்த தண்ணீரில் வறுத்து அரைத்ததைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு உப்பு, பெருங்காயம் சேர்க்கவும். கடாயில் மீதமுள்ள எண்ணெயை சேர்த்து, கரைத்த குழம்பை ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கறிவேப்பிலை பத்தியக் குழம்பு ரெடி.

Loading...
728
2