new BB1

காரமெல் புட்டிங்

Loading...

காரமெல் புட்டிங்பால் – 2 கப்
முட்டை – 2
சர்க்கரை – 4 + 2 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி

முட்டை ஒரு பாத்திரத்தில் அடிக்கவும். நன்றாக நுரைக்க அடிக்க வேண்டும். மிக்ஸியில் ஜூஸ் அடிப்பதில் அல்லது ப்லெண்டரில் அடித்து கொள்ளலாம்.
பாலுடன் 4 மேசைக்கரண்டி சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைக்கவும்.
முட்டை கலவையுடன் சிறிது சிறிதாக வெது வெதுப்பான பாலை விட்டு கலந்து வைக்கவும்.
கடைசியாக வெனிலா எஸன்ஸ் சேர்த்து கலந்து வடி கட்டவும்.
ஒரு பாத்திரத்தில் மீதம் இருக்கும் சர்க்கரை சிறிது தண்ணீர் சேர்த்து சிறுந்தீயில் வைக்கவும்.
அது பாகு போல் நிறம் மாறி வரும்போது எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றவும்.
இதன் மேல் முட்டை பால் கலவை ஊற்றவும். பாத்திரத்தின் மேல் அலுமினியம் ஃபாயில் போட்டு நன்றாக மூடவும். அல்லது டிஃபன் பாக்ஸ் போல் அழுத்தி மூடக்கூடிய பாத்திரமாக தட்டு போட்டு மூடி வைக்கவும். குக்கரில் தண்ணீர் விட்டு கலவை உள்ள பாத்திரத்தை வைக்கவும். விசில் இல்லாமல் மிதமான தீயில் 25 நிமிடம் வைத்து எடுக்கவும்.
அல்லது ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதனுள் கலவை உள்ள பாத்திரம் வைத்து மூடி வேக விட்டு எடுக்கவும்.

Loading...
728
2