new BB1

கார்பன் டைட்டானியம் மேக் ஃபைவ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Loading...

கார்பன் டைட்டானியம் மேக் ஃபைவ் ஸ்மார்ட்போன் அறிமுகம்கார்பன் மொபைல் நிறுவனம் புதன்கிழமை அன்று அதன் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில் கார்பன் டைட்டானியம் மேக் ஃபைவ் ஸ்மார்ட்போனை ரூ.5,999 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் புதன்கிழமை மதியம் 1 IST மணியிலிருந்து அமேசான் இந்தியா வழியாக பிரத்தியேகமாக கிடைக்கிறது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட கார்பன் டைட்டானியம் மேக் ஃபைவ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகிறது. கார்பன் டைட்டானியம் மேக் ஃபைவ் ஸ்மார்ட்போனில் 720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ப்ராசசர் (குறிப்பிடப்படாத சிப்செட்) மூலம் இயக்கப்படுகிறது.
இதில் மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் வருகிறது. கார்பன் டைட்டானியம் மேக் ஃபைவ் ஸ்மார்ட்போனில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா, அத்துடன் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 2200mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இதில் 8.7mm திக் மற்றும் 159 கிராம் எடையுடையது.
இது ஷாம்பெயின் வண்ணத்தில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, 3ஜி, Wi-Fi 802.11 b/ g/ n, ப்ளூடூத் 4.0, FM ரேடியோ, ஜிஎஸ்எம் மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை வழங்குகிறது. மேலும், இதில் ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர் மற்றும் அம்பிஎண்ட் லைட் சென்சார் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.
கார்பன் டைட்டானியம் மேக் ஃபைவ் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:
டூயல் சிம்,720×1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி டிஸ்ப்ளே,2ஜிபி ரேம்,1.3GHz குவாட் கோர் ப்ராசசர்,மைக்ரோSD அட்டை வழியாக 32ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 16ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு,8 மெகாபிக்சல் பின்புற கேமரா,5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா,3ஜி,Wi-Fi 802.11 b/ g/ n,ப்ளூடூத் 4.0,FM ரேடியோ,ஜிஎஸ்எம்,ஜிபிஎஸ்,ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்,2200mAh பேட்டரி,159 கிராம் எடை.

Loading...
728
2