new BB1

கீரைத்தண்டு பச்சடி

Loading...

கீரைத்தண்டு பச்சடி

தேவையானவை:
கீரைத் தண்டு – ஒருகட்டு
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தக்காளி – 1
கறி வேப்பிலை – கொஞ்சம்
கொத்தமல்லி – ஒரு பிடி
புளிப்பில்லாத தயிர் – 2 கப்
சீரகம் – அரை டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க

செய்முறை:
கீரைத் தண்டை சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். இதனுடன் பொடித்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்த மல்லி, தயிர் சேர்த்து, கலந்து கொள்ளவும். எண்ணெய் காய வைத்து சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து இதில் கொட்டவும். இந்த பச்சடி சப்பாத்தி அசைவ உணவுகளுக்கு நன்றாக இருக்கும். இதில் தேவையெனில் கேரட்டைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

Loading...
728
2