new BB1

குறைந்த விலையில் அறிமுகமாகவுள்ள மைக்ரோசொவ்டின் NOKIA 215 புதிய கைத்தொலைபேசி

Loading...

குறைந்த விலையில் அறிமுகமாகவுள்ள மைக்ரோசொவ்டின் NOKIA 215 புதிய கைத்தொலைபேசிமைக்ரோசொவ்ட் நிறுவனம் மைக்ரோசொவ்ட் Nokia 215 புதிய கைத்தொலைபேசியை குறைந்த விலையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
2.4 அங்குல அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கைத்தொலை பேசியில் 320 தர 240 Pixel Resolution கொண்ட திரையுடனும் 0.3 மெகா பிக்சல் கமெராவுடனும் 8 மெகாபைற்ஸ் சேமிப்பு நினைவகத்துடனும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இந்த கைத்தொலைபேசியில் முகப்புத்தகம் மற்றும் Opera Mini Browser அப்பிளிகேசள்களும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கைத்தொலைபேசி முதற்கட்டமாக ஆபிரக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அதேவேளை 29 டொலர்களுக்கு விற்பனையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading...
728
2