new BB1

கூந்தலை காக்கும் உணவுப் பழக்கம்

Loading...

தலைமுடியைப் பாதுகாக்கும் உணவுப் பொருட்களை, தினமும் உணவில் ஏதாவது ஒரு வகையில் எடுத்துக்கொள்ளும்போது முடி மட்டும் அல்ல, சருமமும் ஆரோக்கிய அழகு பெறும்.
கேரட்:

இதில் உள்ள வைட்டமின் ஏ தலையில் உள்ள சீபம் எண்ணெய் உருவாக்கத்துக்கு அவசியம். இந்த சீபம் எண்ணெய்தான் தலைப் பரப்பை காய்ந்துவிடாமல் ஈரப்பதமாக வைக்கிறது. ஈரப்பதமான உச்சந்தலை என்றால், அது ஆரோக்கியமான தலைமுடிக்கு அஸ்திவாரம்.

d245267f-6c18-423d-9d99-fc270463831f_S_secvpf

முட்டை:

ஆரோக்கியமான முடியின் வேர்களுக்குப் புரதச் சத்து அவசியம். முட்டையில் உள்ள புரதம் மற்றும் பயோடின், வைட்டமின் பி 12 முடியின் வேர்க்காலுக்கு ஊட்டத்தை அளிக்கும். முட்டையில் உள்ள பயோடின், வைட்டமின் பி, முடியைப் பளபளப்பாக்கவும், ஆரோக்கியத்துக்கும், பராமரிப்புக்கும் மிகவும் அவசியம். இதைப் பல ஷாம்புகளில் கலந்திருப்பார்கள். முட்டையில் இது இயற்கையாகவே உள்ளதால், தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம். தினமும் உணவிலும் முட்டை சேர்த்துக்கொள்ளவேண்டும்.

அடர் பச்சை நிறக் காய்கறி கீரைகள்:

அன்றாட உணவில் இவை அவசியம் தேவை. இந்த உணவுகள்தான் வைட்டமின் ஏ மற்றும் சி-க்கு ஆதாரங்கள். இரும்பு மற்றும் கால்சியம் போன்ற முடியின் ஆரோக்கியத்துக்குத் தேவையான தாதுப்பொருட்கள் இதில் உள்ளன. பச்சைக் காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் சீபம் உருவாக்கத்துக்கு உதவி புரிகின்றன.

சிவப்பு அரிசி:

புரதம், வைட்டமின்கள், செலினியம் உள்ளிட்ட தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து இதில் நிறைவாக உள்ளன. இதில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் மிகவும் வலுவான முடி உருவாகத் துணை செய்கிறது. அதிக அளவில் உள்ள வைட்டமின் பி முடி உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவி புரிகிறது.

தானியங்கள்:

தலைமுடிக்குத் தேவையான இரும்பு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களுடன், அதிக அளவிலான புரதச் சத்தையும் அளிக்கிறது. மேலும் இதில் பயோடின், வைட்டமின் பி போன்ற உயிர் ஊட்டச் சத்துக்களும் நிறைந்துஉள்ளன. இது முடி உடையும் பிரச்னையைத் தவிர்த்து உறுதியாக்கும்.

வாழைப்பழம்:

வாழைப் பழத்தில் பி6 வைட்டமின் நிறைவாக உள்ளது. இது முடி உதிர்வைக் குறைக்கும்.

வால்நட்:

முடிக்குத் தேவையான ஊட்டச் சத்து மற்றும் பராமரிப்பை அளிக்கும் மிக முக்கிய உணவுகளில் ஒன்று. இதில் நிறைவாக உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட், பயோடின், வைட்டமின் ஈ, தாமிரம் போன்றவை சூரியக் கதிர்வீச்சில் இருந்து கேசத்தைப் பாதுகாக்கும். மேலும், முடி உதிர்வைத் தடுத்து முடியின் நிறத்தைப் பாதுகாத்துப் பளபளப்பாக்கும்.

க்ரீன் டீ:

இதில் உள்ள பாலிஃபீனல் உடல் எடையைக் குறைப்பதுடன், தலை சருமத்தின் ஆரோக்கியத்துக்கும் உறுதுணை புரிகிறது. க்ரீன் டீயை அருந்துவதுடன், அதைக்கொண்டு தலைமுடியை அலசும்போது அல்லது தலை சருமப் பரப்பில் க்ரீன் டீயைத் தடவும்போது பொடுகையும் விரட்டிவிடும். மீன்: ///////நெய் மீன் எனப்படும் எண்ணெய்ச் சத்து நிறைந்த மீன் வகைகளில் ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் நிறைவாக உள்ளது.

இந்தக் கொழுப்பு அமிலங்கள் முடி உதிர்வைத் தடுக்கின்றன. இந்த வகை மீன்களில் இரும்புச் சத்து, வைட்டமின் பி12 போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்துக்குத் துணைபுரிகின்றன.

பூசணி விதை:

முடி மற்றும் சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது. இதில் ஒமேகா 6 மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், புரதம், இரும்பு, துத்தநாகம் போன்றவை அதிக அளவில் உள்ளதால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் துணைபுரிகின்றன.

Loading...
728
2