new BB1

கைவிரல்கள் அழகு பெற

Loading...

கைவிரல்கள் அழகு பெறகைவிரல்கள் சதைப் பிடிப்பற்று மெலிந்து காட்சி அளித்தால் தான் பார்க்க அழகாக இருக்கும்.

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும் அதிகாலையிலும் கைவிரல்களில் விளக்கெண் ணேயைத் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோத்துப் கொள்வது கைவிரல்களை அழகுபடுத்திக் உருவிவிட்டுக் கொள்வது கைவிரல்களை அழகுபடுத்திக் கொள்வதற்கான நல்லதொரு பயிற்சியாகும்.

கைவிரல்களில் தளர ஆலிவ் எண்ணெயைத் தடவி உருவிவிட்டு வந்தால் கைவிரல்கள் மொழுவென்று பளபளப்படைந்து மிக அழகாகத் தோற்றமளிக்கும்.

கைவிரல்களைத் திரும்ப நீட்டியும், மடக்கியும் பயிற்சி செய்வதோடு டைப் அடிப்பது. போன்ற பாவனையில் விரல்களை வேகமாக அசைத்தும் பழகினால் கைவிரல்களின் அமைப்பு சீராவதோடு விரல்கள் சுறுசுறுப்பாகவும் இயங்கும்.

நீண்ட விரல்களைப் பெற்ற பெண்கள் நகங்களை விரல்களோடு ஒட்டியிருக்கும். வண்ணம் வட்ட வடிவமாக வெட்டி விட்டால் பார்க்க அழகாக இருக்கும்.குட்டையான விரல்களைக் கொண்ட பெண்கள் கை விரல்களைவிடச் சற்று நீளமாக கூம்பிய வடிவில் நகங்களை வெட்டி விட்டால் அமைப்பாக இருக்கும்.

பூந்திக் கொட்டையைக் கொஞ்சம் வாங்கி நீரில் ஊறவைத்துத் தேய்த்தால் சோப்பு போன்று நுரை வரும். அந்த நுரையைக்கொண்டு நகங்களைச் சுத்தம் செய்தால் நகங்கள் பளிச்சென சுத்தமாகவும் நல்ல நிறமாகவும் இருப்பதோடு கைவிரல்களின் அழகையும் பெருக்கிக் காண்பிக்கும்.

பாலை கொதிக்க செய்து இறக்கி பொறுக்கும். சூடாக இருக்கும். போது நகங்களை அதில் படுமாறு நனைத்து சுத்தமான பஞ்சினைக் கொண்டு நகங்களை நன்கு தேய்த்து பாலிஷ் செய்தால் நகங்கள் நல்ல பளப்பைப் பெற்று மெருகு ஏறும்.

Loading...
728
2