new BB1

கொசம்பரி

Loading...

கொசம்பரிபொடியாக நறுக்கிய வெள்ளரி பிஞ்சு – ஒன்றரை கப்
காரட் – 2
பயத்தம் பருப்பு – முக்கால் கப்
எலுமிச்சை – ஒன்று
கொத்தமல்லி தழை – அரை கப்
தேங்காய் துருவல் – முக்கால் கப்
மிளகு – 4
உப்பு – ஒன்றரை தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை பொடி செய்துக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் நன்கு தண்ணீரை வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கின வெள்ளரி பிஞ்சு, காரட், பருப்பு ஆகியவற்றை போட்டு அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை, மிளகு போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிளறி வைக்கவும். பிறகு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

தாளித்தவற்றை வெள்ளரி பிஞ்சு கலவையுடன் சேர்த்து கிளறி விடவும்.

சுவையான ஆரோக்கியம் நிறைந்த கொசம்பரி ரெடி

Loading...
728
2