new BB1

கோடை வெயிலுக்கு இதம் தரும் மாங்காய் ஜல்ஜீரா

Loading...

தேவையான பொருட்கள் :

கோடை வெயிலுக்கு இதம் தரும் மாங்காய் ஜல்ஜீரா

நறுக்கிய மாங்காய் துண்டுகள் – அரை கப்
நறுக்கிய கொத்தமல்லி இலை – அரை கப்
நறுக்கிய புதினா – அரை கப்
பொடியாக நறுக்கிய ப.மிளகாய் – 1
வறுத்து பொடித்த சீரக தூள் – அரை ஸ்பூன்
கறுப்பு உப்பு – அரை ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கு

செய்முறை :

* மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

* அரைத்த கலவையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* பிரிஜ்ஜில் 1 மணிநேரம் வைத்து ஜில்லென்று பருகவும்.

* கோடை வெயிலுக்கு ஏற்ற இதமான இந்த பானம் உடலுக்கும் மிகவும் ஆரோக்கியம் தரும்.

Loading...
728
2