new BB1

சாத வடகம்

Loading...

சாத வடகம்

என்னென்ன தேவை?

சாதம் – 2 கப்,
சாம்பார் வெங்காயம் – 10,
காய்ந்த மிளகாய் – 2,
சோம்பு – தேவையான அளவு,
உப்பு – தேவையான அளவு,
பூண்டுப் பல் – 4.

எப்படிச் செய்வது?

சாம்பார் வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். பூண்டுப் பல்லின் தோலை உரித்து நசுக்கிக் கொள்ளவும். இதனுடன் வெங்காயம், காய்ந்த மிளகாய், சாதத்தை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி உப்பு, சோம்பு சேர்த்து நன்றாக பிசையவும். இந்த மாவிலிருந்து சிறிது எடுத்து பக்கோடா போல் கிள்ளி போட்டு வெயிலில் காய வைத்து எடுக்கவும். எண்ணெயில் பொரிக்கும்போதே வெங்காயம், பூண்டு சேர்ந்த கலவையால் சமையலறையே மணக்கும்.

Loading...
728
2