new BB1

சிறு வயதில் பெறப்பட்டு உறைநிலையில் வைத்திருந்த கருவகத் திசுக்கள் மூலம் குழந்தை பெற்ற முதல் பெண்..

Loading...

15682

பெல்ஜியத்தைச் சேர்ந்த இந்தப் பெண் சிறுமியாக இருந்தபோது, அவரது பக்குவமடையாத கருவகத் திசு அகற்றப்பட்டு, உறைநிலையில் பாதுகாக்கப்பட்டது.

புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களுக்கான சிகிச்சையின் போது, கருத்தரிக்கும் திறனை இழக்கக்கூடிய ஆயிரக்கணக்கான பெண்கள் கர்ப்பம் தரிக்க இந்த நடைமுறை உதவும் என்று மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.

இதுவரை காலத்தில், இவ் வகையான சிகிச்சைகளுக்கு வேறு பருவமடைந்த பெண்களின் கருவகத் திசுக்கள் பயன்படுத்தப்பட்டன.

உலகிலேயே, சிறு வயதிலேயே நீக்கப்பட்ட பக்குவமடையாத கருவகத் திசுக்களை உறைநிலையில் பாதுகாத்து வைத்து, அதனை மீள உடலில் பொருத்தியது இதுதான் முதல் தடவையாகும்.

Loading...
728
2