new BB1

ஜவ்வரிசி உப்புமா

Loading...

ஜவ்வரிசி உப்புமாஜவ்வரிசி – 2 கப்
நிலக்கடலை – கால் கப்
உருளைக்கிழங்கு – ஒன்று (சிறியது)
வெங்காயம் – ஒன்று (சிறியது)
இஞ்சி – 1/2 ”
பச்சைமிளகாய் -3
சீரகம் – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சர்க்கரை – கால் தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
எலுமிச்சை- அரை மூடி
உப்பு – தேவைக்கு.
எண்ணெய் – தாளிக்க

ஜவ்வரிசியை தண்ணீர் ஊற்றி அலசி விட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை லேசாக குலுக்கி விடவும். அப்போது தான் எல்லா ஜவ்வரிசியும் ஒன்று போல் ஊறும். நிலக்கடலையை வறுத்து ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஊற வைத்த ஜவ்வரிசியுடன் பொடித்து வைத்திருக்கும் நிலக்கடலையை சேர்த்து கலந்து விடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி போட்டு வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

இப்போது ஜவ்வரிசி, நிலக்கடலை கலவையைப் போட்டு 5 நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி வேக வைக்கவும். பாத்திரத்தை மூடக்கூடாது. மூடினால் கட்டி கட்டியாக வரும். ஜவ்வரிசி வெந்தவுடன் இறக்கவும்.

எலுமிச்சை சாறை பிழிந்து விடவும். சர்க்கரையை மேலே தூவி கிளறி விடவும். சுவையான ஜவ்வரிசி உப்புமா ரெடி.

Loading...
728
2