new BB1

தூதுவளை கீரை சூப்

Loading...

தூதுவளை கீரை சூப்ஸ்கூல் முடிந்து அசதியாக வரும் குழந்தைகளுக்கு காபி, டீ, பால் என்று ஒரே மாதிரி கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக எதாவது குடிக்க கொடுங்கள். அதுவும் சத்துள்ளதாக இருந்தால் நாமும் சேர்ந்தே குடிக்கலாமே! இந்த தூதுவளை கீரை சூப்பை செய்து கொடுங்கள். மேலும், தூதுவளை கீரை சூப் குடித்தால் சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு போன்றவற்றை குணப்படுத்தும்.

இந்த தூதுவளை கீரையின் இலை முக்கோண வடிவில் முட்களுடன் காணப்படும். முட்களை கவனமாக சிறு கத்திரிக்கோல் கொண்டு நீக்கி விட்டு பின்னர் பயன்படுத்த வேண்டும். இப்பொழுது இந்த சூப் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்…

தேவையான பொருட்கள்:

தூதுவளை கீரை – 50 கிராம்
புளி – சிறிய எலுமிச்சைப்பழ அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
துவரம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில், ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர், மிக்ஸியில் சீரகம், மிளகு, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்து கொதிக்கும் புளிக் கரைசலில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், அதில் தூதுவளை கீரை மற்றும் பூண்டை அரைத்து கலந்து, 2 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இறுதியாக, ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் கடுகை போட்டு தாளித்து, அந்த தாளிப்பை சூப்பில் சேர்க்க வேண்டும்.

Loading...
728
2