new BB1

தேங்காய் பால் ரசம்

Loading...

தேங்காய் பால் ரசம்தேங்காய் துருவல் – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 25
புளி – சிறிய எலுமிச்சை அளவு
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 9
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். மிளகாய் வற்றலை இரண்டாக கிள்ளி வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் புளியை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊற வைத்து கரைத்து ஒரு கப் அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றலை போட்டு 30 நொடி வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் வெந்தயம், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைச்சல் ஊற்றி ஒரு கொதி வந்ததும், உப்பு போட்டு கலக்கி விடவும்.

பிறகு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து புளி வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

புளித்தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பிழிந்து 1 1/2 கப் அளவு பால் எடுக்கவும். பிழிந்து எடுத்த பாலை சக்கையில்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

5 நிமிடம் கொதித்த பிறகு திறந்து தயாராக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை ஊற்றி கொதி வரும் முன் இறக்கி விடவும். அதிகம் கொதிக்க விடக் கூடாது, பால் திரிந்து விடும்.

சுவையான தேங்காய் பால் ரசம் தயார்.

Loading...
728
2