new BB1

தோல் நோய்களை குணமாக்கும் நாகலிங்கப் பூ

Loading...

நாகலிங்க மரத்தின் மீது கொத்துக் கொத்தாய் பூத்திருக்கும் நாகலிங்கப் பூக்கள் அதிசயமான மருத்துவ குணத்தை கொண்டுள்ளன. இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இதில் டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் போன்றவை காணப்படுகின்றன.

442d747a-64a6-45ba-9a4f-3304e4306622_S_secvpfஇம்மரத்தின் உலர்ந்த பழங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. இலைகள் தோல் நோய்களுக்கு மேற்பூச்சாகி நிவாரணமளிக்கிறது இலை மற்றும் பழங்களிலுள்ள டைஹைட்ரோ டையாக்சின்டோலோ குயினாசோலோன், டிரிப்டான்ரின், இன்டிகோ இன்டுருபின், ஐசாடின் ஆகியன எதிர் உயிரியாக செயல்பட்டு தோல் உடலின் மென்மையான பகுதிகளில் வளரும் பூஞ்சை, பாக்டீரியா கிருமிகளை அழிக்கின்றன.

இதன் பட்டை மலேரியா சுரத்தை நீக்க பயன்படுத்தப்படுகிறது. குளிர்காலங்களில் ஏற்படும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது. இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொரி, சிரங்கு, படர்தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும்.

இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும். இதன் இலைகள் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் கொண்டதால் இவற்றை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகளை வெளியேற்றி பல்வலியை குறைக்கின்றன. பற்கள் சொத்தையாகாமல் தடுக்கின்றன.

Loading...
728
2