new BB1

நரம்பு நோய்களை குணமாக்கும் சர்பகந்தி

Loading...

சர்ப்பகந்தி வறட்சியைத் தாங்கி வளரும். அதிக குளிரும், அதிக மழையும் இத்தாவரத்திற்கு ஆகாது. இதன் ஆணிவேர் ஆழமாக நேராகச் செல்லும், சல்லிவேர்கள் கிளையாகப்பிரியும்.பதினெட்டு மாதங்கள் வளர்ந்த தாவரங்களின் வேர் மருத்துவ பயனுக்காக தோண்டி எடுக்கப்படுகிறது.

நரம்பு நோய்களை குணமாக்கும் சர்பகந்தி

புதர்செடியான சர்ப்பகந்தாவின் இலைகளும் வேரும் மருத்துவப் பயன் கொண்டவை. சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன. இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம், ஹைப்பர்டென்சன், இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும்.

இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்றவற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது. இலைகளின் சாறு கண்விழி படலத்தின் ஒளிபுகா தன்மையினை போக்க வல்லது. வேரின் கசாயம் பெண்களின் பேறுகாலத்தில் கர்ப்பப்பையினை சுருங்கி விரியச் செய்யும் தன்மை கொண்டது. குடல் கோளாறுகள் காய்ச்சல், ஆகியவற்றினை போக்கக் கூடியது.

வேரின் ஆல்கலாய்டு சாறு தளர்நெஞ்சுப்பை துடிப்பு, உயர் ரத்த அழுத்தம், தூக்கம் ஆகியவற்றுடன் மன உளைச்சலைத் தணிக்கும் திறன் கொண்டது. மனவாட்டநோய், மனநோய், நரம்பு தொடர்பான நோய்கள், முரண் மூளைநோய், ஆகியவற்றினை குணப்படுத்த பயன்படுகிறது. சர்ப்பகந்தியினால் உயிர் காக்கும் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகின்றன.

இந்த மருந்துகள் மூலம் பலநரம்பு வியாதிகளும், புற்று நோய், மலேரியா, மனஅழுத்தம் (ஹைப்பர்டென்சன்), இரத்த ஓட்டம் சீர்படுத்த, மாரடைப்பு இவைகளைக் குணப்படுத்த முடியும். இரத்த அழுத்தம், திக்குவாய், மூளைகோளாறு, பிரசவக் கோளாறு போன்ற வற்றினை சர்ப்பகந்தி தீர்க்க உதவுகிறது.

Loading...
728
2