new BB1

நவீன அம்சங்களுடன் இன்று வெளியாகிறது விண்டோஸ் 10

Loading...

நவீன அம்சங்களுடன் இன்று வெளியாகிறது விண்டோஸ் 10அதிவேக நவீன அம்சங்களை கொண்ட மைக்ரோசொப்டின் விண்டோஸ் 10 இன்று வெளியாகவிருக்கிறது.
இந்த பதிப்பை ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 மொடல் கணனிகள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட்கைப்பேசிகளை வைத்திருப்பவர்கள் விண்டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
விண்டோஸ்-7 பதிப்புக்கு பிறகு வெளியான விண்டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை. சுமார் மூன்றாண்டுகள் இடைவெளிக்கு பிறகு இன்று வெளியாகும் விண்டோஸ்-10 பதிப்பில் பல்வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Loading...
728
2