new BB1

நார்ச்சத்து அதிகம் உள்ள கொத்தவரைக்காய்

Loading...

முற்றியிருக்காத, நார்கள் வராத வளர்ந்த காயே சமைப்பதற்கு ஏற்றது. கொத்தவரங்காய் அடர் பச்சை நிறத்தில் இருந்தால் அது இளம்காய், சமைப்பதற்கு ஏற்றது. பச்சைநிறத்தில் இருக்கும் காய்களையும் சமைக்கலாம். நன்கு வெளிர்ந்த காய்கள் முற்றலாக இருக்கும்.

c26e9350-68f1-475d-b207-1e5586df072f_S_secvpfஇவற்றை சமைப்பது கடினம். நார்களும் அதிகமாக இருக்கும். கொத்தவரை(100கிராம்)யில் 75% நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, சோடியம், கால்சியம் போன்ற சத்துக்களும் சிறிதளவில் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உணவுக்கட்டுப்பாட்டுடன் இருக்க விரும்புகிறவர்களுக்கு இந்தக் காயை முதன்மையாக பரிந்துரை செய்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

கொத்தவரைக்காயில் புரதம், ஃபைபர், ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதால் இது நீரிழிவு நோய்களை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கிறது. இந்த காய் வாய்வு தொல்லை நிறைந்தது. எனவே வாயு தொல்லை பிரச்சனை உள்ளவர்கள் உணவில் இதை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

Loading...
728
2